மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிப்பது பொருத்தமானது என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். போதைப் பொருள் கடத்தல்காரர்கள், விற்பனையாளர்கள் மற்றும் சிறாரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் நபர்களை தூக்கிலிட வேண்டும். இது குறித்து 10 ஆயிரம் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்திய போது …
Read More »தேவையற்ற சதிக்குள் சிக்க வேண்டிவரும்! மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை
இந்த அரசாங்கத்தின் கணிப்பற்ற அரசியல் நாட்டை பிராந்திய ஆட்டத்திற்குள் சிக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கை, பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றி இலங்கைத் தீவைச் சிக்கவைக்கும். நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் …
Read More »வானில் தோன்றிய இரத்த நிலா! இலங்கை மக்களுக்கு கிடைத்த அபூர்வ வாய்ப்பு
21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட நேரம் பயணித்த சந்திர கிரகணத்தை அதிகளவான இலங்கையர்கள் பார்க்கக் கூடிய வாய்ப்பு நேற்று ஏற்பட்டுள்ளது. சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர் கோட்டில் வரும் போது ஏற்படுகின்றது. அதற்கமைய நேற்று இரவு 10.45 மணிக்கு ஆரம்பமாகி இன்று அதிகாலை 4.58 மணி வரை இந்த சந்திரகிரகணம் நீடித்துள்ளது. சந்திர கிரகணம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சி கொடுக்கின்ற …
Read More »யாழில் தேர் இழுத்த இராணுவத்தினர்!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவில் இராணுவத்தினரின் செயற்பாடு அனைவராலும் பேசப்படுகின்றது. இதில் அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் சித்திவிநாயகர் தேரின் வடம் பிடித்து இழுத்துள்ளனர். அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது ஆலயத்திற்கு வருகைத்தந்திருந்த 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர், தமது சீருடையின் மேலங்கியை கழட்டி விட்டு தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். …
Read More »25,000 வருடங்களுக்கு முன் இலங்கையில் தமிழன் வாழ்ந்த இடம்! இதுவரை யாரும் அறிந்திடாத புகைப்படம்
இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு அழகிய தீவே இலங்கை ஆகும். இநது சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாக உள்ளது. சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும். ஆனால் தற்போது இது …
Read More »உலகின் முதல் பிரதமராகும் கிரிக்கெட் வீரர்: இம்ரான்கான் முன்னிலை
பாகிஸ்தானில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று இரவே வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது. கட்சி தொடங்கி 20 ஆண்டுகளுக்கு பின்னர் இம்ரான்கான் தற்போது தான் அதிபர் நாற்காலியை நெருங்கியுள்ளார். எனவே அவரது கட்சியினர் உற்சாகமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இவர் அதிபர் பதவியை ஏற்றால், உலகில் …
Read More »சந்திரகிரகணத்தை முழுமையாக பார்க்க அரிய சந்தர்ப்பம்
21ஆம் நூற்றாண்டின் நீண்ட முழுமையான சந்திரகிரகணத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) இலங்கையில் பார்வையிடமுடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பேராசிரியர் கூறியுள்ளார். பௌர்ணமி தினத்தன்று சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைக்கவிருப்பதுடன், சந்திரகிரகணத்தின் போது சந்திரன் இரத்த சிவப்பு நிறுத்தில் காணப்படும். ஐரோப்பா, ஆபிரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆசியா, இந்து சமுத்திரம் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இதனைத் தெளிவாகப் பார்க்க முடியும். 2011ஆம் ஆண்டு ஜூன் …
Read More »வலப்பனை பிரதேச சபை முன்னாள் தலைவர், சாரதிக்கு 12 வருட சிறைத்தண்டனை
நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலை வரும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் வலப்பனை தொகுதி அமைப்பாளருமான ஜகத் குமார சமரஹேவா மற்றும் அவருடைய வாகன சாரதியாக செயற்பட்ட ஜடிலால் பெர்னாண்டோ ஆகியோருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனையை 23 ஆம் திகதி விதித்து தீர்ப்பளித்துள்ளது. விவசாய திணைக்களத்துக்கு சொந்தமான ஜீப் வண்டியை கடந்த 2004 இல் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதுடன் அனுமதிப்பத்திரமின்றி …
Read More »கர்நாடக இசை கச்சேரியில் இலங்கை உலக சாதனை
40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மேற்கொண்டு புதிய உலக சாதனை படைத்து நம்நாட்டுக்கு பெருமை சேர்த்த திரு ஆரூரன் அருனந்தி அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
Read More »முகமாலை பகுதியில் வெடிப்புச் சம்பவம்! ஒருவரின் நிலை..
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை கண்ணிவெடியொன்று வெடித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் DASH நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியாளரான கருணாதிலக என்பவர் காயமடைந்து பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கண்ணிவெடி ஒன்றினை செயலிழக்க செய்த போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக தகவல் எதனையும் இதுவரை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
Read More »