Thursday , October 16 2025
Home / செய்திகள் (page 167)

செய்திகள்

News

வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்த சிறிலங்கா ரூபாயின் மதிப்பு!

சிறிலங்கா ரூபாயின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்கா ரூபாயின் மதிப்பு இவ்வாறு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று தொடர்ந்து ஆறாவது நாளாக, டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிவைச் சந்தித்தது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்று 161.55 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு நாட்களில், அமெரிக்க டொலரின் மதிப்பு 23 சதங்களால் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் 16ஆம் …

Read More »

வடக்கில் புலிகளை இனி ஒருபோதும் உயிர்ப்பிக்க விடமாட்டோம்! சரத் பொன்சேகா

பொன்சேகா

நாம் வடக்கில் விடுதலைப்புலிகளை ஒழித்துள்ளோம். தற்போது பிரிவினை வாதம் பற்றி பேச அனுமதிக்க முடியாது என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செய்தியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,நாங்கள் புலிகளை அழித்துள்ளோம். சமாதானம் நல்லிணக்கத்திற்கான பின்னணியை தோற்றுவித்துள்ளோம்.

Read More »

வாகன தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டுக்கள் விநியோகம்

வவுனியா புகையிரத வீதியில் வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதாக வவுனியா நகரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா புகையிரத வீதியில் வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறியரக வாகனத்திற்கு 30 ரூபாய் மற்றும் கனரக வாகனத்திற்கு 50 ரூபாய் மட்டுமே வழமையாக அறவிடப்பட்டது.

Read More »

யாழ். சென்ற ரயிலுடன் மோதுண்டு பறிபோன இரு உயிர்கள்

வவுனியா – பறநாட்டன்கல் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. குறித்த விபத்து நேற்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளது. பறநாட்டன்கல் புகையிரதக் கடவைக்கு அருகாமையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டு இரு நாம்பன் மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த விபத்தின் காரணமாக 15 நிமிடங்கள் தாமதித்தே குறித்த ரயில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

யாழ்ப்பாணத்தில் பெற்றோர் பெற்ற கடனுக்காக 11 வயதான மகளுக்கு கிடைத்த தண்டனை

யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் பெற்றோர் பெற்றுக்கொண்ட கடனை செலுத்த முடியாத நிலையில், 11 வயதான மகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த சிறுமி மாலை நேர வகுப்பிற்கு சென்ற போதே பெற்றோருக்கு கடன் கொடுத்தவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் பெற்றோர் வீடு கட்டுவதற்காக 2015ம் ஆண்டு குடத்தனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் நான்கு லட்சம் ரூபா கடனாக …

Read More »

தமிழில் பேச வெக்கப்படும் தமிழர்கள் இதை பார்க்க வேண்டாம்!

தமிழன் தமிழில் பேச வெக்கப்படும்போது, இந்த மண்ணில் தமிழ் பாடல்களை மலாய்க்காரர்கள் மேடை நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியாக பாடி அனைவரையும் அச்சரியப்பட வைத்துள்ளனர். தமிழர்களாக்கிய நாம் இதற்கு வெட்கப்பட வேண்டும். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் .மற்றும் மக்கள் மத்தியில் இந்த வீடியோ அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. https://youtu.be/6WRbA4Dgrcw

Read More »

தயாளு அம்மாள் வெளியேறினால் கோபாலபுரம் கலைஞரின் வீடு யாருக்கு ..?

இன்று தமிழகத்தின் முக்கிய விடயங்களில் ஒன்று கலைஞர் கருணாநிதி அவர்களின் மரணமும் அவர்களது குடும்பமும் தான். வயதில் முதிர்ந்த ஆழமான அனுபவம் நிறைந்த ஒருவர் குடும்பத்தை விட்டு பிரிந்தால் எத்தனை துன்பமும் குழப்பங்களும் நேரும் என்பதற்கு இது ஒன்றே சாட்சி .மரணத்திற்கு முன்பு கலைஞருக்கு இவை தோன்றி இருக்கும் அதனால் தன் 2வது மனைவி தயாளு அம்மாளுக்காக அவர் வசித்த கோபாலபுரம் வீட்டை எழுதிவைத்துள்ளார் . இந்த வீட்டை விட்டு …

Read More »

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்காக ஜெர்மன் தலைநகரில் கவனயீர்ப்பு போராட்டம்

செஞ்சோலை படுகொலைக்கு நீதி கோரும் முகமாக ஜெர்மன் தலைநகரத்தில் பாராளுமன்றத்துக்கு அருகாமையில் (Brandenburger Tor) க்கு முன்பாக பேர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் தாயகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு நிகராக கொல்லப்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் மாதிரி கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்தும் வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும், ஜெர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது. 2006 ஆகஸ்ட் 14 …

Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் 21,959 பேர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக பொது மக்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட அலுவலக தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட அலுவலகத்துடன் இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே இந்த தகவல் கிடைத்துள்ளது. மேலும் இவ்வாறு அதிகரித்து வரும் வறட்சியின் காரணமாக இதுவரை 21,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் …

Read More »

கலைஞருக்காக நானே தெருவில் இறங்கி இருப்பேன்: நடிகர் ரஜினிகாந்த்

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் முன்னரே திட்டமிட்டபடி நேற்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். …

Read More »