தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், நாடளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டும் வேலையில் மக்கள் நீதி மய்யம் ஈடுபடும் என்று பதிலளித்தார். இந்தியா முழுவதும் காவிமயமாக மாற்ற நினைக்கிற பா.ஜ.வை ஒழிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது குறித்து கருத்து சொல்ல …
Read More »ரஜினிக்கு கூறிய அதே கருத்தை விஷாலுக்கும் கூறிய சீமான்
பொதுவாக அரசியலுக்கு புதியவர்கள் வந்தால் ஏற்கனவே அரசியலில் உள்ளவர்கள் அவர்களுடன் களத்தில் நேருக்கு நேர் மோதி பார்ப்பதையே விரும்புவார்கள். ஆனால் சீமான் போன்ற ஒருசிலர் மட்டுமே அரசியலுக்கே இவர்கள் எல்லாம் வரக்கூடாது என்றும் தமிழகத்தை ஆட்சி செய்ய நினைக்க கூடாது என்றும் கூறுவது உண்டு. ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது மக்கள் கையில் உள்ளது என்பதையே இவர்கள் மறந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது தமிழகத்தை தமிழன் மட்டுமே …
Read More »முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்திற்கு இவர் தான் காரணம்!
நல்லாட்சி அரசு ஆட்சிப் பீடம் ஏறிய பின்னர் முல்லைத்தீவில் எந்தச் சிங்களக் குடியேற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. அங்கு நடைபெற்ற சிங்களக் குடியேற்றங்கள் எல்லாம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டவையே. முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்க ப்பட்டமைக்குரிய சாட்சியங்கள் இருந்தால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசுடன் பேச்சு நடத்தவேண்டும். அதை விடுத்து இனவாதம் கக்கிக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரச …
Read More »வெள்ளை கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் பேரணி
வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களும், வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களும் எங்கே என வினவி, மன்னாரில் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டே இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச விசாரனையை வலியுறுத்தி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமானது. குறித்த பேரணி மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியூடாக …
Read More »சசிகலா விரைவில் விடுதலை? – அதிர்ச்சியில் எடப்பாடி
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு ஒன்றரை வருடம் முடிந்துவிட்டது. கணக்கு படி சசிகலா 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விடுதலை ஆகி வெளியே வர வேண்டும். ஆனால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்யும் முயற்சியில் இளவரசியின் மகன் விவேக் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மும்முறமாக ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தின் வாசல்கள் அடைக்கப்பட்டதால் வேறு …
Read More »யாழ் வீதியில் பொலிஸாருக்கு ஏற்பட்ட பரிதாபம்
யாழ். மணியந்தோட்டம் பகுதியில் சற்று முன்னர் நடமாடும் பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த சிலரே பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முச்சக்கரவண்டியை இடைமறித்து விசாரித்தவேளையிலேயே பொலிஸார் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இதன்போது படுகாயமடைந்த ஒரு பொலிஸ் அதிகாரி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு பொலிஸாரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Read More »வவுனியாவை வாட்டியெடுக்கும் வறட்சி! மக்கள் கடும் அவதி
வவுனியாவில் நிலவும் வறட்சி காரணமாக 2014 குடும்பங்களை சேர்ந்த 7389 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செட்டிகுளம் பிரதேச செயலக மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் 1394 குடும்பங்களை சேர்ந்த 5160 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. த்துடன் வவுனியா தெற்கு பிரதேச செயலக …
Read More »இரகசிய முகாம் இருந்தது கருணாவிற்கு தெரியும்! உண்மையை போட்டுடைத்த சட்டதாரணி
கம்பகா – படுவத்தவில் இராணுவத்தின் இரகசிய முகாம் இருந்தது தமக்குத் தெரியும் என்று இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு மே மாதம் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து நடத்தப்படும் விசாரணைகளின் ஒரு கட்டமாக, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் தகவல்களை வெளியிட மறுக்கிறார் …
Read More »முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு கேட்டு போராடும் விஜயகலா
கல்விச் சான்றிதழ்கள் இன்மையால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிவரும் முன்னாள் போராளிகளுக்கு விசேட வர்த்தமானி ஊடாக வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடல், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ”வடக்கு கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி மிகவும் முக்கியமானது. …
Read More »நல்லூர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 12ஆம் நாள் திருவிழா அடியார்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது. முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், வள்ளி – தெய்வானை கிளி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்தனர். இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன்களை செலுத்தி முருகப்பெருமானின் அருள் பெற்றுச் சென்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம், கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு …
Read More »