கிளிநொச்சி, சாந்தப்புரம் பகுதியிலுள்ள மக்களின் குடியிருப்புகளுக்கான கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்கள் அகற்ற முற்பட்டமையினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ச்சியாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சாந்தப்புரம் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் விவசாயம் மேற்கொள்ளப்பட்டிருந்த காணி, கைவிடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்கள் அங்கு தமது …
Read More »கடல் கொந்தளிக்கும்…பலத்த காற்று வீசும்! எச்சரிக்கும் வானிலை மையம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் சீற்றத்துடன் …
Read More »வடக்கு முதலமைச்சரிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
வடக்கு முதலமைச்சர் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதேவேளை முலமைச்சர் தரப்பு சட்டத்தரணிகள் இணக்கப்பாட்டுக்கு வர மறுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Read More »யாழில் தொடரும் குழப்பம்!! விசேட அதிரடிப்படையினர் களமிறங்கும் சாத்தியம்
வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கை மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் மீனவர்களை ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் மக்கள் தெரிவித்திருந்தனர் இந் நிலையில் அங்கு வந்த காங்கேசன்துறை துறை காவல்துறை அத்தியட்சகர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்காவிட்டால் விசேட அதிரடிப்படையின் களமிறக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் திடீரென தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை …
Read More »மோடியைக் கண்ட பின் மகிந்தவுக்கு ஏற்பட்ட மாற்றம்
தவறான புரிதலை மீள் திருத்தும் வகை யில் டில்லிச் சந்திப்புகள் அமை ந்தன. அது மாத்திரம் அல்லாதுஇலங்கை – இந்திய உறவை மேலும் பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்தியப் பயணம் அமைந்தது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரான சுப்ரமணி சுவாமியின் அழைப்புக்கு அமைவாக மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு முன்னாள் அரச தலைவர் மகிந்த …
Read More »மைத்திரியின் மிகப் பெரும் பெய்
மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையிலேயோ அல்லது வேறு வகையிலேயோ முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற வில்லை என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று மீண்டும் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் அரச தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்ததாவது, தமது பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர் என்று தெரிவித்து – அதற்கு எதிராக முல்லைத்தீவில் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. …
Read More »ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகையின் அறிவிப்பு
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அத்துடன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தேவையான ஆலோசனைகள் நடத்த வேண்டியுள்ளது என்றும் ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக அமைச்சரவையின் பரிந்துரை …
Read More »யாழ் பல்கலையில் பதற்றம் விசேட அதிரடிப்படையினர் விரைவு!
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கைக்குண்டொன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பரமேஷ்வரர் ஆலய வளாகத்திற்குள்ளிருந்தே இக் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது இதனால் யாழ் பல்கலை வளாகத்தில் பதற்ற நிலை நிலவி வருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆலயத்தின் சுற்று மதில் அமைப்பதற்கு நிலத்தை தோண்டிய போதே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் விசேட …
Read More »நல்லூர் திருவிழாவிற்கு சென்று திரும்பிய பக்தர்களிற்கு முக்கிய செய்தி
நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவின்போது பக்தர்களால் தவறவிடப்பட்ட பொருள்கள்களை ஆதாரம் காட்டி மாநகர சபையில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று, யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, தவறவிடப்பட்ட தேசிய அடையாள அட்டை, திறப்புக்கள், கையடக்கத் தொலைபேசிகள், பணப்பைகள் மற்றும் பெறுமதியான பொருள்கள் என்பன யாழ்ப்பாண மாநகர சபையின் உற்சவ காலப் பணிமனையில் …
Read More »ஆட்சிக்கு வருவது உறுதி!- இந்தியாவில் மஹிந்த உறுதி
எதிர்வரும் 2019ஆம் ஆண்டுடன் தாம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி, அங்கு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இந்திய அரசாங்கத்துடன் பல காலமாக நீடித்திருந்த இறுக்கமான உறவை சுமூகமாக்குவதற்கதான நேரம் வந்துள்ளதாகவும், அதற்கான ஆரம்பமாக தனது இவ்விஜயம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து இலங்கையின் …
Read More »