தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் எம்.எல்.ஏவும், நடிகருமான கருனாஸ். அவர் பேசியது மிகப் பெரிய சர்ச்சையாக அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். எம்.எல்.ஏ. கருணாஸ் மீது …
Read More »கடைசியில் பழி தமிழர்கள் மீதா?
இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பாக மங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக் குழு முன்வைத்த யோசனைகளுக்கு அன்று தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும் என்று கூறியிருக்கிறார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. இடதுசாரிக் கட்சி ஊடாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடக்கி, சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவராக வளர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இராஜதந்திரியாகவும் இருந்தவருமான மங்கள முனசிங்க தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த அனுதாபத் …
Read More »தலைமை மாறினால் களமிறங்கத் தயார்
தற்போதைய தலைமைகள் போய், மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிங்குவதற்கு சாத்தியும் உள்ளது எனத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடமாகாண சபையின் ஒருசில பின்னடைவுகளுக்கு அரசியல் ரொட்டித்துண்டுகளைக் காட்டி அறநிலை மறந்த அவையினர் சிலரே காரணம். அவ்வாறு இருந்தும் எமது செயற்பாடுகள் செவ்வனே இருந்தன என்றும் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் மாதம் 25 ஆம் திகதியுடன் வடமாகாண சபையின் முதலாவது ஆயுட்காலம் நிறைவுக்கு …
Read More »நான்தான் ஜனாதிபதியையே தேர்வு செய்தேன்: ஒரே போடாய் போட்ட கருணாஸ்
இது குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டபோது அவர் கூறிய பதைல் பின்வருமாறு, நான் 2009 ஆம் ஆண்டு முதல் அமைப்பு நடத்தி வருகிறேன். இதுவரை என் மீதும், என் தொண்டர்கள் மீதும் எந்த ஒரு வழக்கும் இல்லை. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் முழு வீடியோவை பாருங்கள். 47 நிமிடங்கள் நான் பேசியுள்ளேன். இத்தனை வருடங்களாக பொதுக் கூட்டங்களை பேசி வருகிறேன். என்றைக்கும் ஒரு ஜாதிக்கு எதிராக கருத்து சொன்னது …
Read More »விக்னேஸ்வரன் அரசியலுக்கு பொருத்தமானவரல்ல
தமிழ்த் தலைவர்களின் பொறுப்பற்ற கருத்துக்களின் காணரமாகவே, சிங்கள மக்கள் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் தீர்வை எதிர்ப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவின் கட்டமைப்பின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்.இந்த முறைமையிலான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கும் தரப்பினருக்கு தாம் ஆதரவளிப்பதாக ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், …
Read More »மைத்திரிக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார். இந்நிலையில், அன்றைய தினத்தில் நண்பகல் 12 மணிமுதல் 2 மணிவரை நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்திற்கு முன்பாக ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன. …
Read More »48 மணி நேரத்துக்குள் ‘ஆவா’வுக்கு ஆப்பு வைப்போம்
யாழ்ப்பாணக் குடாநாட்டில், ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை அடங்குவதற்கு சிறிலங்கா அதிபரிடன் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்தால், 48 மணி நேரத்துக்குள் ஆயுதக் குழுக்களை அடக்கிவிட முடியும் என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. யாழ்.படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி பலாலியில் உள்ள படைத தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ”தற்போது சட்டம் ஒழுங்கு என்பன காவல்துறையிடம் உள்ளன. …
Read More »இலங்கை இராணுவத்திற்கு உதவி வழங்கியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவிகளை வழங்கியதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி செய்தபோது இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவிகளை வழங்கியதாக மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் பேட்டியளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால் ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த திமுக – காங்கிரஸ் கட்சியில் சம்பந்தப்பட்டவர்களை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி கண்டன …
Read More »தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் ராணுவத்தினரை பற்றி அதிரடி கருத்து வெளியிட்ட சுமந்திரன்
தமிழ் அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவத்தினரையும் ஒரே நிலையில் வைத்து எடைபோட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தடுப்பில் உள்ள விடுதலைப் புலிகள் மற்றும் போர்க்குற்றம்சாட்டப்பட்ட படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பொதுமன்னிப்பு அளித்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற யோசனை ஒன்றை அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்திருந்தார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், …
Read More »யாழ்பாண நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்! பக்தி பரவசத்தில் படையெடுக்கும் மக்கள்
யாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.
Read More »