Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 157)

செய்திகள்

News

1000 பேரை கொன்று குவித்த இந்தோனேஷிய சுனாமி

இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை …

Read More »

ஹெச் ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது: எஸ் வி சேகர்

பெண் பத்திரிக்கையாளரகளைப் பற்றி தவறானக் கருத்துகளைப் பகிர்ந்ததற்காக சர்ச்சையில் சிக்கினார் நடிகர் எஸ் வி சேகர். இதனையடுத்து அவரைக் கைது செய்யப் போலீஸ் தனிப்படை அமைத்துள்ளதாகவும் அதனால் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில காலங்களாக ஊடகங்களில் தலை காட்டாமல் இருந்த எஸ் வி சேகர் தற்போது மீண்டும் பழைய மாதிரி வெளியில் நடமாடத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் இன்று சென்னை அடையாறில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் …

Read More »

ஆவா குழு உறுப்பினர்கள் மூவரை பொலிஸார் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழு உறுப்பினர்கள் மூவரை கோப்பாய் பொலிஸார் நேற்று (30.09.2018) கைது செய்துள்ளனர். கோப்பாய் பகுதியில் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள ஆவா குழுவினர் வந்துள்ளனர். இதனை அடுத்து அங்கு நின்ற இருந்த இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து வால்கள் கொண்டு அங்கு நின்றவர்களை ஆவா குழுவினர் துரத்திச் சென்றுள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவர் கிணறு ஒன்றுக்குள் குதித்து மறைந்து தப்பிக்க முயன்றுள்ளார். …

Read More »

மக்கள் வெள்ளத்தில் கொக்கட்டிச்சோலை

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்ட நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எம்பெருமானுக்கு வசந்த மண்டபத்தில் பிரதான பூசைகள் நடைபெற்று முடிவடைந்து தற்போது தேரிலே அமர்த்தப்பட்டு ஆரையம்பதி மக்களால் தேருக்கான வடம் எடுத்து வழங்கப்பட்டு வடம் பூட்டுகின்ற நிகழ்வுகள் சிறப்புற நடைபெறுகின்றன. https://youtu.be/Q-sf9oM7mTo

Read More »

சுமந்திரனுடன் பயணிக்க முடியாது விக்கி போர் கொடி

சுமந்திரன் என்னை கடுமையாக விமர்ச்சிக்கிறார் – புதிய அணியில் போட்டியிடுவேன் – விக்கி செவ்வி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், “எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்பது …

Read More »

நாங்கள் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை – சரத் பொன்சேகா

பொன்சேகா

போரின் இறுதி இரண்டு வாரங்களில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் அச்சத்தினால், சிறிலங்காவின் அரசியல், இராணுவத் தலைமைகள் வெளிநாட்டில் ஓடி ஒளிந்து கொண்டதாக சிறிலங்கா அதிபர் கூறியிருந்த தகவலை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார். அப்போது இராணுவத் தளபதியாக இருந்த தற்போதைய அமைச்சர் சரத் பொன்சேகா, நியூயோர்க்கில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்களை முற்றாக நிராகரித்திருக்கிறார். “முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வ பயணமாகவே வெளிநாடு …

Read More »

புதிய முன்னணியில் போட்டியிடவுள்ள விக்னேஸ்வரன்

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், “எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் திரும்பத் திரும்ப, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் விமர்சிக்கப்படுகிறேன். முரண்பாட்டு அரசியலைத் …

Read More »

நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத் தீர்த்த உற்சவம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய பத்தாம் திருவிழாவான தீத்தோற்சவ நேற்று பிற்பகல் ஆரம்பமானது. இன்று காலை 5.30 மணியளவில் இந்து சமுத்திரத்தில் சுவாமி தீர்த்தமாடினார். அதில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Read More »

நானும் – மகிந்தவும் தப்பியோடவில்லை பொன்சேகா

இறுதி யுத்தத்தின்போது நானோ முன்னாள் ஜனாதிபதியோ நாட்டை விட்டு இறுதி யுத்தத்தின் போது நானோ மகிந்தராஜபக்சவோ கோத்தபாய ராஜபக்சவோ ஓடி ஒழியவில்லை என முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்ச இராணுவ தளபதி பாதுகாப்பு செயலாளர் உட்பட முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு தப்பியோடினர் என ஜனாதிபதி சிறிசேன நியுயோக்கில் தெரிவித்துள்ள கருத்து குறித்து பதில் அளிக்கையிலேயே சரத்பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார். யுத்தம் …

Read More »

குளிர்ந்து போன யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தில் இன்று காலை சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் வறட்சியடைந்த பிரதேசங்கள் குளிர்ச்சியடைந்தன. விவசாயிகள் நெல் விதைப்புக்காக மழையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளதால், அடுத்த கட்டமாக வயல்களை உழுது சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். வெள்ளம் தேங்கும் அளவுக்கு மழை வீழ்ச்சி பதிவாகவில்லை எனினும், விவசாயிகளுக்கு நன்மை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Read More »