தனி நாடு (ஈழம்) கேட்டுப் போராடிய புலிகளை அழித்து விட்டோம். இப்போது இருப்பது தமிழர் தலைநகர் என்று சொல்லப்படும் திருகோணமலை நகர் பகுதி. இந்த நகர் பகுதி எப்போதும் சிங்களத்திற்கு ஒரு உறுத்தலாகவே உள்ளது. அதை தவிடு பொடியாக்க வேண்டும் என்று சிங்களம் நீண்ட காலமாக முயன்று வருகின்றது . அதற்கு ஒரே வழி திருகோணமலை நகரை புனித பூமியாக்குவது. அதன் மூலமாக திருமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் புனித பூமி …
Read More »யாழ்ப்பாணம் அழியப்போகின்றது; வெளியான அதிர்ச்சித் தகவல்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள் காரணமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி யாழ். குடாநாடு முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிலத்தடி நீரை நம்பிவாழும் யாழ். குடாநாட்டு மக்களின் நன்மையை கருத்திற்கொண்டு, நன்னீர் தேக்கங்கள் மற்றும் …
Read More »இந்துக்கள் தான் அதை செய்ய வேண்டும்: அறநிலைத்துறையை வம்பிழுத்த எச்.ராஜா!!
எச்.ராஜா சர்ச்சையான கருத்துக்களை பேசுவதை ஃபுல் டைம் ஜாப்பாகவே செய்து வருகிறார். பின்னர் பேசியது நான் இல்லை என் அட்மின் என்றும், அது எடிட் செய்யப்பட்டது எனவும் கோக்குமாக்கு பண்ணிவருகிறார். சமீபத்தில் அறநிலைத்துறை அதிகாரிகள் குறித்தும், அவர்களின் குடும்பத்தார் குறித்தும் அவதூறாக பேசியதற்காக, ஹெச்.ராஜாவை கைது செய்யக்கோரி அறநிலைத்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா அதிரடியாக சிலைகளை கைப்பற்றும் பொன்.மாணிக்கவேலுக்கு என் வாழ்த்துக்கள். சிலை …
Read More »பெரும் சரிவை சந்தித்துள்ள ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் வரலாற்றில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் இன்றைய விற்பனை பெறுமதி 171.42 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »சிங்களக் குடியேற்றங்கள் நடந்ததை ஏற்ற மைத்திரி
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகள் வழங்கியமை எனக்குத் தெரியாது. உடனடியாக அங்கு முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தவும். இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு மாகாண அரச தலைவர் சிறப்புச் செயலணியின் கூட்டம் அரச தலைவர் செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள், மகாவலி …
Read More »மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த், கருணாநிதியின் மறைவிற்கு பின் திரும்பி வந்தார். விமான நிலையத்திலிருந்து நேரிடையாக கருணாநிதியின் சமாதிக்கு சென்ற அவர் நடக்க முடியாமல், சுற்றி நடப்பதை உணரமுடியாமல் நின்ற விதம் அந்த வீடியோவை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. வீடு திரும்பிய விஜயகாந்திற்கு கடந்த ஆகஸ்ட்30 ந்தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் தற்பொழுது …
Read More »டிரெண்டுக்காக அரசியல் பேசும் விஜய் – அதிமுக அமைச்சர் பதிலடி
சமீபகாலமாக விஜய் அரசியல் சார்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் தனது அரசியல் பிரவேசத்திகு அடிபோட்டார். இந்த படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை, ஒருவேளை நான் முதல்வரானால், ஊழலை ஒழிக்க முயற்சி செய்வேன், ஆனால் அது முடியுமா? என்று தெரியவில்லை என்று கூறினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வருவாய்த் …
Read More »நாட்டில் பல இடங்களில் பலத்த மழை
நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினமும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும்.கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ …
Read More »இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய திட்டம்?
இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதனால் இலங்கையில் பேஸ்புக் தடை ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச தகவல் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார். சிறுவர் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு …
Read More »காளிகோயில் திருவிழாவால் அரசியல் கைதிகளை மறந்தாரா? சம்பந்தன்!
அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் தீர்வைப் பெற்றுக் கொடுக்கா விட்டால் அரசியலில் இருப்பவர்கள் பதவி விலகுங்கள் இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பாக சட்டமா அதிபரைச் சந்திப்பதற்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அது ஏன்? …
Read More »