நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட அவர், புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது 5 லட்சம் ரூபா சரீரப்பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த வழக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 7ஆம் மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது, விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் …
Read More »விரல்கள் இல்லாதபோதும் பரிட்சையில் சாதனை படைத்த பாடசாலை மாணவன்
குருணாகலில் மாணவன் ஒருவரின் அபார திறமை குறித்து ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.குருணாகலில் மாணவன் ஒருவரின் அபார திறமை குறித்து ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவன் இப்பாகமுவ, கிரிபமுன வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.பிறக்கும் போதே கை மற்றும் கால்களில் விரல்களை இழந்த நிலையில் பிறந்துள்ளார்.உடலில் எவ்வளவு குறைகள் இருந்தாலும், உணவு உட்கொள்வது ஆடை, அணிந்து கொள்வது உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் தனியாகவே சமோதிய செய்து வந்துள்ளார். ஒருபோதும் தனது …
Read More »விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளி திடீர் மரணம்!!
உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி பிரதீபனின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் மதியம் முல்லைத்தீவு முந்தையன்கட்டிலுள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார். புனர்வாழ்வு பெற்ற குறித்த முன்னாள் போராளி புற்றுநோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய போராளியாக விளங்கிய விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் பணியாற்றிய குறித்த போராளி இறுதி யுத்தத்தின் …
Read More »மழை எல்லாம் ஒரு காரணமா? தேர்தலை சந்திக்க பயப்படும் அதிமுக!
தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காதது குறித்து பின்வருமாறு பேசினார். தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகளில் மழை காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டாம் என தமிழக தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியிருப்பதால் அங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார். தமிழக தேர்தல் அதிகாரியின் இந்த முடிவை முதல்வர் அறியாமல் இருக்கமாட்டார். இதன் மூலம், ஆளும் தரப்பினருக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதில் …
Read More »அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ஊழல் குறித்து பேசுவதா? ஸ்டாலின் கேள்வி
துணை வேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியிருப்பதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் கவர்னரே துணைவேந்தர் விவகாரத்தில் ஊழல் என்று பேசுவது ஆச்சரியம் அளிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளுநர், ஊழல் குறித்து மேடையில் பேசுவது …
Read More »யாழில் தொடரும் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்
யாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். யாழ். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக்குழு , வாகனங்கள் மற்றும் கடைகளை அடித்து உடைத்து அட்டகாசம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நாச்சிமார் கோவிலடி, ஓட்டுமடம் மற்றும் தம்பி லேன் ஆகிய இடங்களில் இரவு 8.45 …
Read More »துர்நாற்றம் வீசும் திருகோணமலை கடற்கரை
திருகோணமலை உற்துறைமுக கடற்கரைப்பகுதியில் என்றும் இல்லாதவாறு அதிகளவிலான குப்பைகள் கரையொதுங்கியுள்ளன. கடற்கரை ஓரங்களில் பிலாஸ்டிக் போத்தல்கள், குப்பைகள் என பரவலான பொருட்கள் கரையொதுங்கியிருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் கடற்கரைப்பகுதியின் சில இடங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும், இதன்காரணமாக அப்பகுதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருவதனால் நதிகளினூடாக இந்தக் குப்பைகள் அடித்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
Read More »வெள்ளத்தில் மூழ்கும் இலங்கையின் ஒரு பகுதி
அக்குறணையில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாகவும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி நேற்றிரவு பெய்த மழையை அடுத்து பிங்கா ஓயா ஆற்று நீர் கண்டி – மாத்தளை பிரதான வீதி வழியே ஓட ஆரம்பித்ததால் சுமார் 4 அடிவரையான வெள்ளம் நிரம்பி காணப்பட்டது. இதனால் நேற்று மாலை 7 மணியிலிருந்து 8 மணி வரை அப் பகுதிக்கான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பித்திருந்தது. வெள்ளம் வழிந்து மகாவலி …
Read More »இந்தியா மீது பொருளாதார தடை: மோடியின் கோரிக்கையை ஏற்பாரா டிரம்ப்?
இந்திய அரசு அண்டை நாட்டு தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து போர் ஏவுகனைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் செயல்பட்டுவந்தது. தற்போது ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகனைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா – ரஷ்யா கையெழுத்திட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே, ஈரான் விவகாரத்தில் இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்த அமெரிக்கா, ரஷ்யா விவகாரத்திலும் மிரட்டல் விடுத்தது. இந்த மிரட்டல்களை மீறியே இந்தியா ரஷ்யாவுடன் ஒப்பந்தம் வைத்துள்ளது. இந்தனால், இந்தியா …
Read More »மைத்திரி – மகிந்த இரகசிய சந்திப்பு ?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது சமீபத்தைய கொலை சதி முயற்சிகள் உட்பட முக்கிய விடயங்கள் குறித்து …
Read More »