Tuesday , October 14 2025
Home / செய்திகள் (page 150)

செய்திகள்

News

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

பட்டாசு மற்றும் தீபாவளி அன்று உபயோகப்படுத்தப்படும் பல்வேறு வெடிப்பொருட்களால் நாடு முழுவதும் காற்று மாசுபடுவதாகவும் மக்களுக்கு இதனால் பல்வேறு சுவாசப் பிரச்சனைகள் வருவதாகவும் கூறி பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்ய வேண்டுமென பொதுநல வழக்கொன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று ஏ கே சிக்ரி மற்றும் அஷோக் பூஷன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள் “தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 …

Read More »

ஆறு இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். தமிழகம் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆறு மீனவர்கள் இழுவை மடி படகில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை கடற்படையினர் அவர்களை கைது செய்ததுடன் , அவர்கள் பயணித்த படகையும் கைபற்றினார்கள். குறித்த மீனவர்களை இன்றைய தினம் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு …

Read More »

மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி

ஜனாதிபதி

மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பு -ஜனாதிபதி மலையக மக்களுக்கு முதற்தடவையாக நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு பகுதிகளில் பாதுகாப்புத் தரப்பினரின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் …

Read More »

ரோ அமைப்பை பற்றிய உண்மை வெளியிட வேண்டும்! நாமல் வேண்டுகோள்

இந்திய புலனாய்வு அமைப்பான ரோவிடம் பணம் பெறும் இரு அமைச்சர்களின் விபரங்களை ஜனாதிபதியும் பிரதமரும் வெளியிடவேண்டும் என நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். சில அமைச்சர்கள் ரோவிடமிருந்து பணம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது உண்மையானால் இதுவொரு தேசிய பிரச்சினை என தெரிவித்துள்ளார். அதேவேளை இது சர்வதேசரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ள நாமல்ராஜபக்ச இந்த அமைச்சர்களை அம்பலப்படுத்தவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளது எனவும் …

Read More »

டிசம்பர் 31க்கு முன் மைத்திரியின் முக்கிய அறிவிப்பு

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையினை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய தேவையான பங்களிப்பினை வழங்குமாறு ஜனாதிபதி மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டிற்கான மாகாண சபை செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார். சகல மாகாணங்களினதும் ஆளுநர்கள், …

Read More »

ரணிலை அவசரமாக சந்தித்தார் சிறிசேன!

இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது தனது இந்திய விஜயம் குறித்து பிரதமர் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள …

Read More »

தடம்புரண்டது தொடருந்து- 22 பேர் உயிரிழப்பு!!

தைவான் நாட்டின் இலான் பகுதியில் கடுகதித் தொடருந்து தடம்புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 170-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தைவான் நாடின் வடகிழக்கு பகுதியில் உள்ள இலான் கவுன்ட்டியில் கடலோரத்தை ஒட்டிச் செல்லும் விரைவுத் தொடருந்துப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகரான தைபெயில் இருந்து டைட்டுங் நகரை நோக்கிச் செல்லும் தொடருந்துகள் இந்த பாதை வழியாக செல்கின்றன. இந்நிலையில் தைபெய் நகரில் இருந்து இந்த பாதை வழியாக நேற்றுச் சென்ற …

Read More »

இணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்

யாழ்ப்பாணம் – இணுவில் பிரதேசத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணுவில் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட மௌன ஊர்வலம், உடுவில் பிரதேச செயலக அலுவலகத்தை சென்றடைந்து, உடுவில் பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றினை கையளித்தலுடன் நிறைவு பெற்றது. இதன்போது அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது, இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் …

Read More »

பொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்

பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வட.மாகாண முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட மூவர் விண்ணப்பித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் நாளை மறுதினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி உறுப்பினர் சி.தவராசா உட்பட மூவர், தமக்கு பதவி காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென விண்ணப்பித்து …

Read More »

யாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்

யாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதிக்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை …

Read More »