தமிழக அரசியலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை தவறில்லை என கூறி 18 எம்.எல்.ஏக்களின் மனு தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை இழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை எம்.எல்.ஏக்களை சந்திப்பதற்காக தினகரன் மதுரை கிளம்பி சென்றார். அங்கு ஒரு விடுதியில், நேற்றும், இன்றும் எம்.எல்.ஏக்களுடன் …
Read More »என் வழி நியாயமான வழி : ரஜினி மீண்டும் அறிக்கை
ரஜினி அரசியல் வருகையை உறுதி செய்து மக்கள் மன்ற் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வந்த போது திடீரென தனது ரசிகர் மன்ற செயலாளராக லைகாவில் பணிபுரிந்த மகாலிங்கம் நடராஜன் என்பவரை நியமித்தார். மன்றத்திற்கு சிறிதும் சம்மந்தம் இல்லாத மகாலிங்கத்திற்கு இவ்வளவு பெரிய பொறுப்பை வழங்கிய போதே ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு உருவானது. மேலும் மாவட்ட வாரியாகவும் முக்கியப்பொறுப்புகளில் உள்ளவர்களும் ரஜினியின் நீண்டகால ரசிகர்கள் இல்லை எனவும் கூறப்பட்டு வந்தது. இத்தகையக் …
Read More »பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் அதிரடியாக கைது!
அம்பாறை ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் பொலிஸாரினால் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகக் கட்டிடத்தில் தங்களது பெற்றோருடன் தங்கியிருந்த நிலையில் அக்கரைப்பற்றுப் பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை, தொழில்நுட்ப துறையை சேர்ந்த சில சிங்கள மாணவர்கள், கடந்த இரண்டு வார காலமாக ஆக்கிரமித்து போராடி வந்தனர். இதனையடுத்தே பல்கலைக்கழகத்தை மறு அறிவிப்பு செய்யும் வரையில், மூடும் தீர்மானம் நிர்வாகத்தினால் …
Read More »விக்கி புதுக்கட்சி அறிவித்த நாள் தமிழர் வாழ்வில் கறைபடிந்த நாள்
80 வயதிலும் பதவிவெறி பிடித்து, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாரகரன் உருவாக்கிய தமிழ் மக்களின் அரசியல் இருப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருக்குலைக்க சிங்களப் பேரினவாதத்தால் சூசகமாக களமிறக்கப்பட்ட தமிழின துரோகியை அடையாளம் காட்டியநாள் நேற்று (நேற்றுமுன்தினம்). இது தமிழர் வரலாற்றில் கறைபடிந்த நாள் என்று வரலாறு தமிழருக்கு குறித்துச் சொல்லும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று …
Read More »மஹிந்த் மற்றும் சுதந்திர கட்சி அணியை மிரட்டிய ரணில்
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு நிபுணர்களால் சமர்பிக்கப்பட்ட வரைவு ஆவணத்தின் மொழி பெயர்ப்புக்களை படித்துப் பார்ப்பதற்கு நேரம் போதாது என்றும் கால அவகாசம் தேவை எனவும், மகிந்த அணியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியும் வலியுறுத்தின. ஆனால் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, அப்படியானால் இந்த வரைவு ஆவணத்தை மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப் போகின்றேன் என்று மிரட்டியதை அடுத்து மகிந்த அணியும், சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியும் பணிந்தன. வழிநடத்தல் குழுவின் …
Read More »பலமுறை கண்டித்தோம் ; அவர் திருந்தவில்லை : ஜெயக்குமார் தம்பி பகீர் பேட்டி
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. சிபாரிசுக்கு வந்த பெண்ணை அவர் கற்பழித்ததால், அப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றார் எனவும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் வெளியாகியது. ஆனால், இந்த புகாரை ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆடியோவை மாபிங் செய்துள்ளனர். இதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஆடியோவில் இருப்பது அனைத்தும் உண்மைதான். சிபாரிசுக்கு வந்த பெண்ணுக்கு …
Read More »கிளிநொச்சி வைத்தியசாலையில் 12 வயது சிறுமிக்கு பிரசவம்! திகைத்துபோன மருத்துவர்கள்
மல்லாவியில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அம்புலன்ஸில் அழைத்துவரப்பட்ட 12 வயது சிறுமி போகும் வழியிலே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையும் பிறந்தது. பின் கிளிநொச்சி வைத்தியசாலையில் தாயும் சேயும் அனுமதிக்கபட்டனர்.இந்த 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த செய்தி மருத்துவர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Read More »இலங்கை அதிபராகும் கோத்தாவின் கனவு…!
டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக, அடுத்த அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என நம்பப்படும் கோத்தாபய ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட மேல்நீதிமன்றுக்குச் சென்றிருந்தார். அங்கு, கோத்தாபய ராஜபக்சவிடம் ‘மகிந்த தங்களை அடுத்த அதிபர் வேட்பாளராகக் களமிறக்காது, தங்களின் சகோதரரான பசில் ராஜபக்சவை அடுத்த அதிபர் வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது’ என ஊடகங்கள் கேள்வியெழுப்பின. ‘எமது குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்துவதை …
Read More »அரசாங்கத்துடன் அமைச்சர் சம்பிக்க கருத்து மோதல்
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைகளை நீக்கிக் கொள்வதற்கு இராஜதந்திர ரீதியிலான முன்னெடுப்புக்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என மாநகர மற்றம் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கருத்தை அமைச்சர் முன்வைத்துள்ளார். இதுவல்லாமல், காணாமல் போனோர் ஆணைக்குழு, காணாமல் போனோர் செயலகங்கள், இழப்புக்களுக்கான நஷ்டஈடு வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மூலமாக …
Read More »அரசியல் வருகை குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை
கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, “நான் அரசியலுக்குவந்தால் அதை வைத்துப் பதவி வாங்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்றஎண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். அப்படிப்பட்டவர்கள்இப்போதே விலகி விடுங்கள்” என்று நான் தெளிவாகக் கூறியிருந்தேன். நான் சொன்னது வெறும் பேச்சுக்காக இல்லை. தமிழ்நாட்டில் ஒரு புது அரசியலைஅறிமுகப்படுத்தி அதன் மூலமாக ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்என்பதற்காகத் தான் நாம் அரசியலுக்கு …
Read More »