இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் இன்றைய நாளே கரிநாள் என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று மீண்டும் இடம்பெற்ற மோதல்கள் குறித்து செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்கட்சி உறுப்பினர்கள்,சபாநாயகர் பொலிஸார் மீது இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தாக்குதலிற்கு அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களே காரணம் என ஹக்கீம் தெரிவித்துள்ளார். அவர்கள் சபாநாயகரின் ஆசனத்தை பலவந்தமாக ஆக்கிரமித்தனர் என தெரிவித்துள்ள ஹக்கீம் சபாநாயகரின் …
Read More »கட்சி ஆரம்பிக்காதீர்கள்: ரஜினிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் வேண்டுகோள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் பணியை தொடங்கி, அந்த பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார். இருப்பினும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்றே ஒருசில அரசியல்வாதிகளும், அரசியல் நோக்கர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ‘ரஜினிகாந்த் என்னுடைய நண்பர் என்ற முறையில் அவர் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்பது எனக்கு தெரியும். …
Read More »கரையை நெருங்கும் கஜா புயல்…
இரவு 8 மணிமுதல் இரவு 11 மணிக்குள் கஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாநில அவசரக்கட்டுப்பாடு மையத்திற்கு சென்னை வானிலை மையம் இந்த புயல் குறித்து முன்னெச்சரிக்கையாக தகவல் தெரிவித்திருந்தது. கடலூர் – பாம்பன் இடையே நாகைக்கு அருகே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவிப்பு விடுத்துள்ளது. சென்னைக்கு அருகே 290 கிமீ ..,நாளைக்கு அருகே 290 …
Read More »ஜனாதிபதி இலட்சியங்களில் இருந்து விலகிவிட்டார்! ரணில்
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த நல்லாட்சி அரசாங்கம் கொண்டிருந்த இலட்சியங்களில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகிவிட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் தாம் இன்னும் அந்த இலட்சியங்களுடனேயே செயற்பட்டு வருவதாகவும் அரசியல் அமைப்புக்கு ஏற்ப தேர்தலை நடத்தினால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சியினர் …
Read More »மைத்திரிக்கு ரணில் விடுத்துள்ள அதிரடி சவால்
பாராளுமன்றத்தில் எந்தநேரத்திலும் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருகின்றோம். ஆனால் மஹிந்த மைத்திரி அணியினர் நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றனர். எமது மக்கள் பலத்தை காட்ட பாராளுமன்ற தேர்தல் அல்ல ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெற்றியை உறுதிப்படுத்வோம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணி தற்போது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் மக்கள் பேரணி ஒன்றை நடத்திவருகின்றது. இதில் …
Read More »கன்னத்தில் கை வைத்து கலவரத்தை வேடிக்கை பார்த்த ரணில்
பாராளுமன்ற அமர்வில் இன்று ஏற்பட்ட கைகலப்பு களேபரங்களுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி பக்கத்தின் நான்காம் வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்து கன்னத்தில் கை வைதுகொண்டு சிரித்தவாறு சம்பவங்களை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்துள்ளார். அத்துடன் அவ்வப்போது ரவி, சஜித்,சாகல எம்.பிக்கள் அவரிடம் காதில் ஏதேதோ கூறிக்கொண்டு அங்கும் இங்குமாய் ஓடித் திருந்தனர். இந்நிலையில் சபாபீடதுக்கு முன்பாக கைகலப்பு தொடங்கியவுடன் எதிர்க்கட்சி பக்கத்தில் முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாதுகாப்பு …
Read More »இன்னோசன்ஸ் இல்ல இக்னோரன்ஸ் –ரஜினியை விளாசிய நடிகை கஸ்தூரி
நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் எழுவர் விடுதலைக் குறித்து அவரின் கருத்து என்னவென்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி எந்த எழுவர் எனக் கேள்வியெழுப்பினார். அவரது இந்த பதில் தமிழக அரசியல் சூழ்நிலையில் பலத்த சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. ரஜினியின் இந்த பொறுப்பற்ற பதிலுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்து முதல்வர் ஆகும் கனவில் இருக்கும் ரஜினிகாந்துக்கு 27 வருடங்களாக தமிழகம் …
Read More »சினிமாகாரங்கனா கேவலமா? எடப்பாடியாரை சீண்டிய ரஜினிகாந்த்
சர்கார் பட சர்ச்சையின் போது அதிமுகவினர் பேனர்களை கிழித்து அட்டூழியம் செய்தனர். பின்னர் இவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்த படக்குழுவினர் சர்ச்சைக் காட்சிகளை நீக்கினர். சமீபத்தில் அதிமுகவினர் சர்கார் பேனரை கிழித்து அராஜகத்தில் ஈடுபட்டது குறித்து முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தலைவனின் திட்டங்களை விமர்சனம் செய்தால் அவனது தொண்டர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். சினிமாகாரர்களுக்கு அவ்வளவு பணம் எப்படி வந்தது என எனக்கு தெரியவில்லை? ரூ.100 டிக்கெட்டை …
Read More »உயர்நீதிமன்ற வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு!
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான இரண்டாம் நாள் விசாரணைகள் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளன. பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாமில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, இன்றைய தினம் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தமது விளக்கத்தை முன்வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது …
Read More »மாபெரும் கூட்டணியுடன் களமிறங்கும் – பிரதமர் மகிந்த
சிறிலங்கா பொதுஜன முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பன ஒன்றிணைந்து செயற்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனைத்து இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுடன் நேற்று நடந்த சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போது கூட்டணிக்கான இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும், அதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் பிரதமர் மகிந்த கூறியுள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, சிறிலங்கா …
Read More »