இம்மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்காக பிரத்தியேகமாக விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இதுவரை காலமும் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் மத்திய கிழக்கு நாடுகளுக்காக விநியோகிக்கப்பட்டு வந்த பிரத்தியேக கடவுச்சீட்டு எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் விநியோகிக்கப்படமாட்டாது. ஆனால் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து …
Read More »மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.17 ரூபாவாக பதிவாகியுள்ளது.அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மையில் அதிகரித்திருந்த நிலையில் இன்று வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »கிளிநொச்சி விரையும் பிரதமர் ரணில்
கிளிநொச்சி முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சிக்கு செல்லவுள்ளதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் மக்கள் பிரதமரை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.
Read More »சுதந்திரக் கட்சியை எவராலும் வீழ்த்த முடியாது!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது காணப்படுகின்ற நெருக்கடிகளை மையப்படுத்தி எவராலும் கட்சியை பலவீனப்படுத்தவோ, வீழ்த்தவோ முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா, கட்சியினர் அனைவரும் ஒன்றினைந்து நெருக்கடிகளை எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார். ராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அரசியல் ரீதியில் இன்று காணப்படுகின்ற அனைத்து நெருக்கடிகளையும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே வெற்றிக் கொள்ள …
Read More »எந்நேரத்திலும் மஹிந்த மீண்டும் பிரதமராகலாம்??
தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நீண்ட தூரம் பயணத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஆகையால் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் பிரேரணையையொன்று எந்நேரத்திலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் பயணிப்பதை ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சிலரே …
Read More »மகிந்த அணியினரால் சம்பந்தன் கட்சிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!
இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை, தகுதியிழப்புச் செய்யக் கோரி, சட்டநடவடிக்கை எடுக்கபடவுள்ளது.மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இவ்வாறு எச்சரித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். “இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.ஆனால் அதனை …
Read More »மைத்திரியுடன் கடும் மோதல்! கூட்டத்தில் நடந்த அடிதடி
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. தொகுதி அமைப்பாளர்கள், ஜனாதிபதி முன்னிலையிலேயே கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதல் வரை சென்றுள்ளதுடன் தொகுதி அமைப்பாளர்கள் பியதாசவை தாக்க முயற்சித்துள்ளனர். உடனடியாக செயற்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர், மோதலை சமரசப்படுத்தியுள்ளனர். சம்பவத்தில் எருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஸ்ரீலங்கா …
Read More »அரசியல் தீர்மானத்தை எடுக்க போகும் மகிந்த!
கட்சியினர் மற்றும் நாட்டுக்காக பாரதூரமான அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க உத்தேசித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தங்காலை தொகுதி பிரதிநிதிகளுடனான கூட்டம் அங்குகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரக்கட்சியினர் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களிடம் சேவைகளை பெற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளமையானது, கட்சிக்கு பெரும் …
Read More »பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார் நாமல்!
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள இடர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று நேரில் சந்தித்தார். கிளிநொச்சி பாரதிபுரம், பன்னங்கண்டி, கல்லாறு, பாடசாலைகளிலும், தர்மபுரம் பொது நோக்கு மண்டபத்திலும் தங்கியுள்ள மக்களைச் சந்தித்தார். நாமலுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் வருகை தந்தார்.
Read More »மகிந்த மைத்திரி கூட்டணி அமைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணி, ஐக்கிய சுதந்திர முன்னணி ஆகிய இரு தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியமைத்தே தேர்தல்களை எதிர்கொள்வோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மேலும் , மஹிந்த -மைத்திரி கூட்டணி ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய சவால்களை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
Read More »