Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 115)

செய்திகள்

News

ரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இந்தியா உதவி!

நாட்டில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவரும் ரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இந்தியா உதவி செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று வியாழக்கிழமை கூடிய நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டார். பெரும் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நாட்டை கட்டியெழுப்பும் வகையில் இந்திய மத்திய வங்கி 400 மில்லியன் டொலர் நிதியை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய பிரதமர் நியமனத்தை தொடர்ந்து நாட்டில் …

Read More »

சம்பந்தனின் சிறையில் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியில் சிறைப்பிடித்துள்ளது. அதன் காரணமாகவே பிரதமர் புதிய அரசியலமைப்பு உட்பட பல்வேறு விடயங்களுக்கு கூட்டமைப்பினருக்கு ஆதரவு வழங்கி வருகின்றார் என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். பொதுஜன பெரமுன முன்னணியின் வெற்றி கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலிலே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. 2020 ஆம் ஆண்டு ஒன்றிணைந்த எதிரணியினரே ஆட்சி பொறுப்பினை ஏற்பார்கள். ஐக்கிய தேசிய …

Read More »

3 பாரிய ஆபத்துக்களை நாடு எதிர்நோக்குகின்றது

நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார். இன்று விடுத்துள்ள அறிக்கையில் இலங்கை மூன்று பாரிய ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொருளாதாரம் எவ்வேளையிலும் கவிழக்கூடும் என்பதே முதல் ஆபத்து என அவர் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு வருடங்களில் தேசிய கடன் ஐம்பது வீதத்தினால் அதிகரித்துள்ளது என …

Read More »

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா முல்லைத்தீவில்

வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பு எமக்குண்டு என தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஆராயும் வகையில் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி அங்கு கருத்து தொிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். புத்தாண்டில் வடக்கிற்கான முதலாவது விஜயமாக அவரது இன்றைய விஜயம் அமைந்துள்ளது.முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த முன்னாள் …

Read More »

சம்பந்தனிற்கு பேரிடியான செய்தி!! பெரு மகிழ்ச்சியில் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சி தலைவராக செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். சபாநாயகரின் இத்தீர்மானத்தை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்துள்ளார். புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று கூடியது. இதன்போதே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் நியமித்திருந்தார். இந்நியமனம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தோற்றம் பெற்றதையடுத்து இது குறித்து தெரிவுக்குழு அமைத்து …

Read More »

சுமந்திரனின் முட்டாள்தனத்தை அம்பலப்படுத்திய கருணா!

அண்மையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் தமிழ் மக்களுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய காரணம் என்றும் கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தினை உறுகாம நீர்ப்பாசன திட்டத்திலிருந்து பிரிப்பதற்கு எடுத்துவரும் முயற்சியைக் கைவிடுமாறு கோரி விவசாயிகளால் செங்கலடி நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் …

Read More »

மைத்திரி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் ?

மைத்திரிபால சிறிசேனவை அங்கொட மனநல மருத்துவ ஆய்வகத்தில், மனநல பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவின், நடவடிக்கைகள், அவர் உறுதியான மனநிலையில் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால், அவரை அங்கொட மனநல மருத்துவமனையில் மேனநல சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரி, தக்சிலா லக்மாலி ஜெயவர்த்தன என்ற பெண், மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். …

Read More »

நீண்ட நாட்களிற்குப் பின் நேருக்கு நேர் மைத்திரி – சந்திரிக்கா!!

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரனதுங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டபோதும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என தகவல் கிடைத்துள்ளது. சந்திரிகாவின் தந்தையாரும் இலங்கையின் முன்னாள் பிரதமருமான பண்டாரநாயக்கவின் 120 ஆவது பிறந்த தின நிகழ்வு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான இவரது இன்றைய பிறந்த தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் …

Read More »

29 கட்சிகளுடன் பாரிய கூட்டணியில் களமிறங்கவுள்ள மகிந்த!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டம் மினுவங்கொடவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே செயற்பாட்டு ரீதியான கட்சியாக உள்ளது. நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் …

Read More »

இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள இரு சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் இந்த நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவுமே இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளன. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தங்களிடமுள்ள விபரங்களை வழங்கவேண்டும் என இரு அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆகக்குறைந்த அளவில் இறந்தவர்களின் பெயர்களை சேகரிப்பதன் மூலமாவது …

Read More »