வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்று மாலை அப்பம்மாவுடன் சென்ற சிறுவன் இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமை கிராமத்தையே சோகமாக மாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை சுந்தரபுரத்திலிருந்து சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 3 பகுதிக்கு தொண்ணூறாம் நாள் நினைவஞ்சலிக்கு முன் ஆயத்த வேலைக்காக சிவானந்தம் தருண் என்ற ஆறு வயது சிறுவன் அப்பம்மாவுடன்சென்றிருந்ததார். அங்கு ஏனைய சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்ததாகவும் இரவாகியதால் சிறுவனை காணவில்லை என …
Read More »கொலைகார ராஜபக்ச கும்பல் தமிழருக்குத் தீர்வைத் தராது
தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசி அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்குவேன் என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியிருப்பதை நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது. கொலைகார ராஜபக்ச கும்பல் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்க முன்வராது. கடந்தகால அனுபவங்களில் இருந்து தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இதை உணர்ந்து விட்டார்கள். இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்சல் …
Read More »ஜனாதிபதியால் காவற்துறையில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றம்
இலங்கையில் நலனுக்காக அடுத்த சில மாதங்களில் காவற்துறை மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
Read More »தமிழர் பகுதியில் 30 வருடங்களாக ராணுவம் வசமிருந்தது விடுவிப்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் படையினர் வசமிருந்த சைவமங்கையர் கழகத்தின் கட்டடங்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. மன்னார் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்புவால், சைவமங்கையர் கழகத்தின் தலைவி திருமதி யோகேஸ்வரா சிவாநந்தினியிடம் விடுவிப்புப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன. 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் சைவமங்கையர் கழகம், பெண்களின் வாழ்வியலை பாதுகாத்து முன்னேற்றும் நோக்கில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள், பெற்றோரால் கைவிடப்பட்ட சிறு பெண்குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தது. …
Read More »ஏ- 9 வீதியில் போக்குவரத்து தடை
பொதுமக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தினையடுத்து தம்புள்ளை, பனாம்பிட்டிய பிரதேசத்தின் ஏ – 9 வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த இரு மாதகாலமாக தரம் 5 இற்கு ஆசிரியர் ஒருவர் இல்லாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும் பெற்றோர்களும் அப்பகுதிபொதுமக்களும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக அப் பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »மூத்த கட்சிகளுக்கு நேர்ந்த நிலை எமக்கு ஏற்படாது
மூத்த கட்சிகள் போன்று இக்கட்டான நிலைக்கு பொதுஜன பெரமுன முகங்கொடுக்காது என, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இக்கட்டான தருணங்களை எதிர்கொள்வதை தவிர்த்துக் கொள்வதற்காக கட்சியின் சேமிப்பில் 21 மில்லியன் ரூபாய் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையிலுள்ள கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சியாக தொழிற்பட்ட காலத்தில் கட்சி தலைமை அலுவலகமான சிறிகொத்தவின் மின்சார கட்டணத்தை …
Read More »நாளை தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திக்கின்றார் ரணில்
தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் பிரதமருக்கும் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளை இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தான விதம் தொடர்பாக, தமிழ் முற்போக்கு கூட்டணி அதிருப்தி வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த வாரம் பிரதமர் மற்றும் அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ரவி சமரவீர ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அரசாங்கத்துக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற …
Read More »மகிந்தவும் சம்பந்தனும் கூட்டணியா? பரபரப்பு தகவல்
மகிந்த அரசாங்கத்தினை கவிழ்ப்பற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பை ரணில் அரசாங்கம் பயன்படுத்திவிட்டு தற்போது ஏமாற்றி விட்டதாக கூறப்படுகின்றது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரணிலுடன் இரகசிய ஒப்பந்தம் செய்ததாகவும் அது தற்போது கிழித்து எறியப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இலங்கை அரசிடம் இருந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு எப்பொழுதுமே ஏமாற்றம் அடந்து கொண்டே இருக்கின்றது. தலைமைகள் எப்பொழுதுமே தமது சுய இலாபங்களுக்காக கொள்கைகளை மாற்றிக்கொள்கின்றன. இப்படி ஏமாற்றும் அரசுக்கு சார்பாகவே சுமந்திரன் எம் பி வழக்காடியிருந்தார். …
Read More »சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளாதது ஏன்?
பீல்ட் மார்ஷல் பதவிக்கு மதிப்பளிக்கப்படாத அணிவகுப்பிற்கு, இராணுவ சம்பிரதாயம் மற்றும் ஒழுங்கு மீறப்படும் இடத்திற்கு, பீல்ட் மார்ஷல் என்ற வகையில் என்னால் சென்று நிற்கமுடியாமையால் நான் அங்கு செல்வதைத் தவிர்த்தேன் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்றைய தின 71ஆவது தேசிய தின நிகழ்வில் தாம் கலந்துகொள்ளாமை தொடர்பில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார். எனக்குக் …
Read More »முல்லைத்தீவில் அதிகாலை முதல் பலத்த மழை
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் மழை பெய்து வருகின்றது. இதனால், பல பகுதிகளிலும் வான்பரப்பை மழைமேகம் சூழ்ந்துள்ளதுடன், கரையோரங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது. இதனால் கரையோரப்பகுதி மீனவர்களின் பல வாடிகள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மீனவர்களின் மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Read More »