பொருளாதர மத்திய நிலைய குழப்பங்களிற்கு முழுக்காரணம் சம்பந்தன் ஐயாவே என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்..வவுனியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்படி தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், பி.எஸ்.எம். சாள்ஸ் வவுனியா மாவட்ட அரச அதிபராக இருந்தபோது நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுகூட்டத்தில் ஓமந்தை பகுதியிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதாக முடிவெடுக்கபட்டது. பின்னர் சில அரசியல் வாதிகளால் தாண்டிகுளத்தில் அதனை அமைக்க வேண்டும் …
Read More »குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடமைக்கும் பணிகள் ஆரம்பம்
குறைந்த வருமானமுடைய தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்கள் இரண்டிற்கு வீடமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இதன்படி வவுனியா பம்பைமடு பிரதேசத்தினை சேர்ந்த தியாகராசா மூர்த்தி என்பவரின் குடும்பத்திற்கும் வெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பமொன்றுக்குமே இவ்வாறு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன. வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவின் வழிக்காட்டலில், புலம்பெயர்ந்தவர்களின் நிதிப்பங்களிப்போடு குறித்த வீடமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »தம் சுயநலம் கருதியே கூட்டமைப்பும் செயற்படுகிறது: டக்ளஸ்!
அரசாங்கம் சுயநலம் கருதியே செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இவ்வாறான நிலையிலேயே செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். கிளிநொச்சி, செல்வாநகர் மக்களுடன் நேற்று முந்தினம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பொன்றை மேற்கொண்டார். இதன்போது குறித்த பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசுடன் இணைந்தே செயற்படுவதாகவும், எந்தவொரு நாட்டிலும் …
Read More »கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் புதிய திட்டம்!
நாங்கள் மறுபிறவி எடுத்து புத்துயிர்வு பெற்றுத்தான் இந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இதனை அமைப்பதற்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவினை வழங்கியிருக்கின்றது. இந்த ஆதரவானது தமிழ் மக்களின் தீர்வுக்காவும் எமது மண்ணை அடைய வேண்டும் என்பதற்காகவே மாத்திரமே இதனை மேற்கொண்டுள்ளனர் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். களுதாவளை மகா வித்தியாலைய தேசியபாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் செந்தில்குமார் தலைமையில் …
Read More »பாரிய கூட்டணி ஒன்றை விரைவில் வெளிப்படுத்துவோம்!
ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உள்ளடக்கிய பாரிய கூட்டணி ஒன்று அடுத்த மூன்று வாரங்களில் வெளிப்படுத்தப்படும் என எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குறித்த கூட்டணி அமையும் என இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும் இக் கூட்டணியின் பெயர் தொடர்பாக …
Read More »மஹிந்த ராஜபக்ஷ திடீர் என வெளியிட்டுள்ள அதிரடி கருத்து
மக்கள் செல்வாக்கு கொண்ட ஒருவரையே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது தாம் வேட்பாளராக முன்நிறுத்தவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். த ஹிந்து பத்திரிகையினால் பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்தர மாநாடு ஒன்றில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கழிந்துள்ளன. எனினும், தமிழ் மக்களை திருப்பதிபடுத்த முடிந்துள்ளதுடன், அரசியல்வாதிகளை திருப்பதிபடுத்த முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது புதிய …
Read More »ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் ஐ.தே.க!
தேசிய அரசாங்கத்தை உருவாக்கி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லையென்றால் ஐ.தே.க உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் வெளியாகும் சிங்கள வார பத்திரிக்கையொன்றே மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய அரசாங்கம் அமைக்கும் விடயத்தில் ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்வதன் ஊடாக அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐ.தே.க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அப்பத்திரிக்கை செய்தி …
Read More »ஜனாதிபதியின் கருத்தை விமர்சிக்க சபாநாயகருக்கு உரிமை இல்லை!
ஜனாதிபதியின் செயற்பாடுகளை சபாநாயகர் விமர்சிக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினருக்கும் விமர்சனங்களை வெளியிட அதிகாரம் உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், சபாநாயகர் என்ற பதவியை வகிக்கும் கரு ஜயசூரிய, ஜனாதிபதியை விமர்சனம் செய்ய முடியாது எனவும் …
Read More »மைத்திரி ரணில் தலைமையில் விஸ்வரூபம் எடுக்கவுள்ள புதிய கூட்டணி!
மைத்திரியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் மகிந்தவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து பாரிய கூட்டணி உருவாக்க இரு கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது. நேற்று முன்தினம் இரவு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.சுமார் 2 மணித்தியாலங்கள் நடந்த இந்தப் பேச்சுக்களில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாசிறி ஜெயசேகர, …
Read More »மின்சார லிப்டில் சிக்கி உயிருக்கு போராடிய ரணில்? அதிர்ச்சி தகவல்
நாடாளுமன்றத்தில் உள்ள மின்சார லிப்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிக்கித் தவித்ததாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மின்சார லிப்டில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கிக் கொள்வதற்கு முன்னரே பிரதமரும் சிக்கியதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த லிப்டில் இடையில் நின்றமை தொடர்பான அனைத்து காணொளிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவத்திற்கு முகம் கொடுத்த உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுவொரு சூழ்ச்சி …
Read More »