Tuesday , October 14 2025
Home / செய்திகள் (page 106)

செய்திகள்

News

உயர்தரப் பரீட்சை விண்ணப்பத்திற்கான இறுதி திகதி இன்று!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்றுடன் முடிவடையவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ரீதியில் பரீட்சைக்கு தோற்றும் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் மாதிரி விண்ணப்பப்படிவதை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். அத்துடன் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.

Read More »

இலங்கை சர்வதேச முதலீடுகளை இழக்கின்றது

கோத்தபாய ராஜபக்

உறுதியற்ற அரசியல் செயற்பாடுகளால் இலங்கை அரசாங்கம் பல முதலீடுகளை இழந்து வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கம்பஹாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எலிய அமைப்பின் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கையால் புதிதாக நேரடி முதலீட்டு வாய்ப்புகளைப் பெற முடியவில்லை. இதற்கு இங்கு காணப்படும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையே …

Read More »

பாலச்சந்திரனை கொலை செய்தது இராணுவம்! சிறீதரன் எம்.பி

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ். சென்ற அமைச்சர் ராஜித சேனாரத்ன தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வை கேட்கவில்லை. அபிவிருத்தியையே கேட்கின்றனர் என்ற கருத்தை கூறியுள்ளார். என்ன …

Read More »

ஐ.நா. அமர்வுகள் ஆரம்பம்

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் உரையுடன் இன்றைய அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன.மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்களை உள்ளடக்கியதாக அவரின் உரை அமைந்திருந்தது. இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதோடு, இலங்கை தொடர்பான விவாதம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் ஐக்கிய நாடுகள் மனித …

Read More »

மாதா சொரூபதில் ஏற்பட்ட அதிசயம்! படையெடுக்கும் பக்தர்கள்

வாசுதேவநல்லூர் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று இரவு மாதா முகத்தில் இருந்து வியர்வை வடியத் தொடங்கியது. இந்த அதிசயத்தை பார்த்து மக்கள் வியப்பு அடைந்தனர். நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ளது வேலாயுதபுரம். இங்கு பிரசித்தி பெற்ற குருசுமலை மாதா ஆலயம் உள்ளது. 75 ஆண்டுக்கு முன் இந்த மலையில் மாதா காட்சி கொடுத்தாராம். இதைத்தொடர்ந்து அங்கு ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அதன் பவள விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. …

Read More »

தற்போதைய நாடாளுமன்றம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து

மனிதர்களின் நடத்தையை தவறாக எடுத்துக்காட்டும் இடமாக தற்போதைய நாடாளுமன்றம் மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் 1970ஆம் ஆண்டுகளில் இருந்த நாடாளுமன்றம் தற்போது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றிற்கு வருகைதந்து பதிலளிக்க முடியாத ஒருவர் குறித்து விமர்சனம் முன்வைக்கப்படுவதில்லை. எனினும், இன்று அந்த நிலைமை மாறியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ …

Read More »

ஜெனிவா தீர்மான இணை அனுசரணையில் இருந்து விலகுகிறது சிறிலங்கா

Maithripala Sirisena

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ”வெளிநாட்டுபங்களிப்புடன் கூடிய போர்க்குற்ற தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. இந்த தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு …

Read More »

போர் குற்றங்களில் இருந்து இராணுவத்தை காப்பாற்ற மைத்திரி போடும் புதிய திட்டம்!

மைத்திரிபால சிறிசேன

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வழங்கிய இணை அணுசரனையிலிருந்து விலகிக்கொள்வது குறித்து இலங்கை ஆராய்ந்துவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை உறுதி செய்துள்ளார். நாங்கள் இதிலிருந்து விலகிக்கொள்ளலாம் என எதிர்பார்க்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள அமர்வுகளிற்கு நாங்கள் தயாராகிவருகின்றோம்,நாங்கள் சில முன்னேற்றங்களை காண்பித்துள்ளோம், என தெரிவித்துள்ள சிறிசேன எங்கள் படையினர் யுத்த குற்றங்களில் …

Read More »

உறவுகளுக்கு நீதிகோரி நல்லூரில் ஆரம்பமான புதிய முயற்சி

வலிந்து காணாமல் ஆக்கபபட்ட உறவுகள் போராட்டத்தை ஆரம்பித்து இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு, 3 லட்சம் கையொப்பம் பெற்று ஐ.நாவிற்கு அனுப்பும் செயற்திட்டத்தை இன்று ஆரம்பித்தனர். தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டஉறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை கையெழுத்துச் சேகரிப்பில் ஈடுபட்டனர். வெளிநாட்டவர் உட்பட பலர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமது கையொப்பங்களை இட்டனர்.

Read More »

கொழும்பில் பாரிய அளவில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின்…

மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை குறித்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 2945 மில்லியன் பெறுமதியான 294 கிலோ 490 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதற்கு பாராட்டு தெரிவித்தே ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்ட வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

Read More »