Tuesday , October 14 2025
Home / செய்திகள் (page 100)

செய்திகள்

News

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல்

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் அனைத்தும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 661 மத்திய நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

மாவை சேனாதிராசாவை நோில் கிண்டலடித்த சீ.வி.விக்னேஸ்வரன்…

யாழ்.பல்கலைக்கழக மாணவா்களால் நேற்று நடாத்தப்பட்ட கவனயீா்ப்பு போராட்டத்தில் வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனும் மாவை சேனாதிராசாவும் நேருக்கு நோ் சந்தித்துக் கொண்டனா். இதன்போது கனகாலம் நித்திரையோ? என சீ.வி.விக்னேஸ்வரன் கேட்டுள்ளாா். இதற்கு பதிலளித்த மாவை சேனாதிராசா நாங்கள் விழிப்பாகத்தான் இருக்கிறோம். எங்கள் போராட்ட வரலாறு உங்களுக்கு தொியும்தானே? என பதிலளித்துள்ளாா்.

Read More »

அரசு காணிகளை விற்பதாக போலி பிரசாரங்கள்!

இலங்கை இராணுவத் தலைமையக காணியை வெளிநாட்டுக்கு விற்ற தேசப்பற்றாளர்கள் என தம்மை இனங்காட்டிக்கொள்பவர்கள், தற்போதைய அரசாங்கமே அரச காணிகளை விற்பதாக போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு அரச காணிகள் எதனையும் விற்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னைய மகிந்த அரசின் காலத்தில் கொழும்பு காலி வீதியிலிருந்த பாதுகாப்பு அமைச்சின் பெருமளவு காணிகள் சீன அரசிற்கு விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் …

Read More »

கிழக்கில் கால் பதித்த தமிழ் மக்கள் கூட்டணி!

வடக்கினை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணி கால் பதித்துள்ளது. அவ்வகையில் கூட்டமைப்பின் கோட்டை என வர்ணிக்கப்படும் பட்டிருப்புத் தொகுதியிலே முதலாவது மக்கள் சந்திப்பு இன்று நடந்துள்ளது. இச்சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சந்திப்புக்கள் கிழக்கு மாகாணத்தில் தொடருமென தமிழ் மக்கள் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …

Read More »

மாங்குளத்தில் ஆதிசிவன் சிலை, திருக்குடமுழுக்கு…

முல்லைத்தீவு- மாங்குளம் பகுதியில் சிவஞான சித்தா்பீட வளாகத்தில் ஆதிசிவன் சிலை ஒ ன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், தமிழில் திருக்குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பாாியளவில் குடியேற்றங்கள் மற்றும் திட்டமிட்ட பௌத்தமய மாக்கல் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஆதிசிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Read More »

யாழில் வெங்காய விலைகளில் பெரும் வீழ்ச்சி

யாழ்ப்பாணத்தில் பெரும்போக வெங்காய அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை யாழ். மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக சின்ன வெங்காயச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டதால் தற்போது வெங்காய விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நீர்வேலி, கோப்பாய், சிறுப்பிட்டி, புத்தூர், இடைக்காடு, நவக்கிரி, உரும்பிராய், ஊரெழு, அச்சுவேலி, மற்றும் பத்தைமேனி போன்ற பிரதேசங்களில் ஆயிரத்து 500 வரையிலான ஹெக்ரேயர் நிலப்பரப்பில் சின்ன வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலநிலைக்கு ஏற்றவாறு அதிக விளைச்சலை இம்முறை காலபோகத்தின்போது விவசாயிகள் …

Read More »

இலங்கையில் சில பிரதேங்களில் இடம்பெற்ற நிலநடுக்கம்!

மலையகத்தின் சில பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இன்று காலை 8.15 – 8.20 மணிக்கு இடைப்பட்ட பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட உதவி இயக்குனர் உதய குமார தெரிவித்துள்ளார். அதற்கமைய பதுளை, ஹாலிஎல, பசறை, வெலிமடை, நுவரெலியா ஆகிய பகுதிகளில் சிறு அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டதாக நிலையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தி …

Read More »

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நிறைவு!

ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இனிதே நிறைவுபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்ற விசேட திருப்பலிப் பூஜையின் பின்னர் திருச்சொரூபப் பவனியுடன் திருவிழா நிறைவுபெற்றது. குறித்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நெடுந்தீவு பங்குப்பணிமனை மேற்கொண்டிருந்ததுடன் தமிழகத்தைச் சேர்ந்த பங்குத்தந்தைகளும் இத்திருவிழாவில் பங்கெடுத்திருந்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா! வரலாற்று …

Read More »

எதிவரும் காலத்தில் டிஜிட்டல் மையமாக மாறவுள்ள பொருளாதாரம்

ரணில் விக்கிரமசிங்க

எதிவரும் காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒன்றினை உருவாக்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமாக சிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுள்ளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.

Read More »

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகரின் அதிரடி உத்தரவு

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தனக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் மா அதிபர் தன்னிடம் அறிவித்துள்ளார் எனவும் சபாநாயகர் இதன்போது அறிவித்துள்ளார். கொக்கேய்ன் போதைப்பொருளை பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் …

Read More »