Saturday , August 23 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் (page 18)

இந்தியா செய்திகள்

ப்ளூ வேல் விளையாட்டால் விபரீதம்: ராஜஸ்தானில் ஏரியில் குதித்த மாணவி

ராஜஸ்தான் மாநிலத்தில் ப்ளூ வேல் ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவியை போலீஸார் மீ்ட்டனர். தற்கொலைக்குத் தூண்டும் ப்ளூ வேல் ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மும்பை, கொல்கத்தா, உத்தரபிரதேசம் மட்டுமின்றி தமிழகத்தில் மதுரையிலும் ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். ப்ளூ வேல் ஆன் லைன் விளையாட்டை நீக்கி விடுமாறு …

Read More »

நாட்டுக்கு கிடைத்த வள்ளல் மோடி: மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா

புதுடில்லி: நாட்டு மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த பாடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு கிடைத்த வள்ளல்’ என மத்திய கலாசார துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா பாராட்டியுள்ளார்.

Read More »

எல்லையில் நிலவும் அசாதாரண சூழல்

இந்தியா – ரஷ்யா நாடுகளின் முப்படைகள் இணைந்து அக்‍டோபர் மாதம் மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்தியா முதல் முறையாக அண்டை நாட்டுடன் இணைந்து முப்படைகளின் போர் பயிற்சிகளை ரஷ்யாவில் மேற்கொள்ள உள்ளது. ரஷ்யாவுடன் இணைந்து இந்திரா என்ற பெயரில் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளது. இந்த கூட்டுப் பயிற்சியில் இரு நாடுகளின் தரைப்படை, …

Read More »

இட்லி மாவுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்க கோரிக்கை

பாக்கெட் செய்யப்பட்ட இட்லி, தோசை மாவுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இட்லி மாவு 18 சதவிகித வரி பிரிவில் வரும் நிலையில், இதை 12 சதவிகித பிரிவில் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வறுகடலைக்கான ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதோடு சாம்பிராணி, களிமண் சிலைகள், பிரார்த்தனை மெத்தை ஆகியவற்றுக்கான வரியையும் குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எஸ்யுவி …

Read More »

38 பில்லியனா? ஷாக் கொடுத்த மின் கட்டணம்!

வழக்கமாக வீடுகளுக்கு மின்சார கட்டணம் எவ்வளவு வரும்? அதிகப்பட்சமாக சில ஆயிரங்களுக்குள்தான் . ஆனால், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த குஹாவுக்கு எகிறி இருக்கிறது இக்கட்டணம். இதையடுத்து வீட்டில் மின்சாரத்தை திடீரென்று துண்டித்துவிட்டார்கள். ஏன், என்னாச்சு என்று மின்வாரியத்தில் விசாரிக்க சென்ற குஹாவுக்கு ஷாக். ஏனென்றால் கட்டணம் ரூ.38 பில்லியனை கட்டாததால்தான் மின்சாரத்தைத் துண்டித்ததாகக் கூறியுள்ளனர். இதுபற்றி குஹா கூறும்போது, ‘மூன்று அறைகள் கொண்ட எனது வீட்டில் 3 ஃபேன்கள், …

Read More »

சூனியக்காரி என்று பெண் அடித்துக்கொலை

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ளது கெர்கி. இங்கு வசித்து வந்தவர் கன்யா தேவி. வயது 40. இவரது கணவர் ஒரு மாதத்துக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து மகன் மற்றும் மகளுடன் வசித்துவந்த அவரை, உறவினர்கள் சூனியக்காரி என்ற கூறினர். இதையடுத்து அவரை அடித்துக் கொடுமைப் படுத்தி, மனிதக் கழிவை சாப்பிட வைத்தனர். பின்னர் சாகும்வரை அடித்தேக் கொன்று எரித்துவிட்டனர். இந்தச் சம்பவம் கடந்த 3-ம் தேதி நடந்துள்ளது. இது …

Read More »

சுதந்திர தின விழா ஒத்திகை

சுதந்திர தினவிழாவையொட்டி தலைநகர் டெல்லியில் முழு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்லி ராஜபாதையில் நடைபெறவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும், முழுச் சீருடை அணிந்த பாதுகாப்புப் படையினர் நடத்திப் பார்த்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றம்‌, குடியரசுத் தலைவர் மாளிகை, செங்கோட்டை, தூதரகங்கள் உள்ளி்ட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு …

Read More »

நாடு முழுவதும் ஒரே மின் கட்டணம்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் யோசனை கூறியுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ரயில்வே கட்டணங்கள் போல் மின் கட்டணங்களும் நாடெங்கும் ஒரே சீராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். பீகாரில் அனைத்து பகுதிகளுக்கும் அடுத்தாண்டு இறுதிக்குள் மின்சார வசதி செய்து தரப்படும் என்றும் …

Read More »

இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் களமிறக்கப்படுகிறது!

எதிரிகளுடன் சண்டையிட இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கவும், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களை ஒடுக்கவும் நம் ராணுவ வீரர்கள் இரவு பகலாக போராடிவருகின்றனர். இதனால் ஏற்படும் உயிர்சேதங்களை குறைக்கும் வகையில், பாதுகாப்பு பணிகளுக்காக எல்லையில் ரோபோக்களை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டிருந்தது. இதையடுத்து ரோந்து பணிகள் மேற்கொள்வது, வெடிபொருட்களை கொண்டுசெல்வது உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 544 ரோபோட்கள் தேவைப்படுவதாக …

Read More »

​தொலைபேசி உரையாடல், வாட்ஸ் அப்-ஐ கண்காணிக்க மத்திய அரசின் தொழில்நுட்பம் ரெடி!

இந்தியாவில் நடக்கும் தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளையும் கண்காணிக்க மத்திய அரசு தொழில்நுட்பம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் கீழ் பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்கள், வாட்ஸ் அப் உரையாடல்கள் போன்ற அனைத்தையும் கண்காணிக்க முடியும். இதற்காக நாடு முழுவதும் 20 இடங்களில் மத்திய கண்காணிப்பு மையங்கள் செயல்படத்துவங்கிவிட்டன. கூடுதலாக ஒரு கண்காணிப்பு மையமும், இந்த மையத்துக்கான பேரழிவு மீட்புக்குழு ஆகியவை இந்த ஆண்டு இறுதிக்குள் செயலுக்கு வர …

Read More »