கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள ஓகி புயலால் தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ஓகி புயலின் தாக்கம் கேரளாவையும் ஆட்டிப்படைத்துள்ளது. ஓகி புயல் திருவனந்தபுரம் அருகே 60 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதால், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொச்சி ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்ததால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கி …
Read More »மாட்டிறைச்சி தடை: வாபஸ் வாங்கும் மோடி அரசு??
நாடு முழுவதும் இறைச்சிக்காக பசு, எருமை, ஒட்டகம், காளை, உள்ளிட்ட விலங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு பிறப்பித்த இறைச்சிக்காக மாடுகள் கொல்வதை தடை செய்யும் உத்தரவு வாபஸ் பெறப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகாராஷ்டிர அரசு மாட்டிறைச்சிக்காக பசுக்களை விற்க தடை விதித்தது. இதன் பின்னர், கடந்த …
Read More »5 இலட்சம் ரூபாய்க்கு புதிய மின்சார கார்
உலகின் குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடிய கார் கருதப்படும் நேனோ கார் வாகனங்களின் அடுத்த தயாரிப்பாக மின்சார நேனோ கார் இந்திய சந்தைக்கு இன்று அறிமுகப்படுத்திவைக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஹதராபாத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசின் சிறப்பு தீர்மானத்தின் படி எதிர்வரும் 2030ம் ஆண்டளவில் எரிபொருளில் இயங்கும் அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த …
Read More »ஆசிரியர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை – கோவையில் அதிர்ச்சி
ஆசிரியர் திட்டி காரணத்தில் அரக்கோணத்தை சேர்ந்த 4 பள்ளி மாணவிகள் சமீபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த கலெக்டர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், கோவை மாவட்டம் சோமனூரில் 12ம் வகுப்பு படித்து வரும் அருள்செல்வன் என்ற மாணவரை, வேதியியல் ஆசிரியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த அருள்செல்வன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரின் …
Read More »விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் தமிழ் நடிகை பூனேவில் கைது!!
பிரபலமில்லாத தமிழ் பட நாயகி ஒருவர் பூனேவில் உள்ள விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் போலீஸார் அவரை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் கே.எஸ்.சரவணன் இயக்கத்தில் வெளியான படம் வாடா செல்லம். இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாகவும், கரோலின் நாயகியாகவும் நடித்தனர். இந்த தமிழ் படத்தில் மட்டுமின்றி ஆடை விளம்பரங்களிலும், நகை கடை விளம்பரங்களிலும் நடித்துள்ளார் கரோலின். இந்நிலையில், பூனேவில் உள்ள ஒரு …
Read More »மாணவன் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டிய ஆசிரியை
தெலங்கானா மாநிலத்தில் வகுப்பறையில் பேசிய 5வயது மாணவனின் வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டிய ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் நர்சிங்கி அருகே உள்ள உப்பலகுடா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஊரை சேர்ந்த 5 வயது சிறுவன் அந்த பள்ளியில் யூ.கே.ஜி வகுப்பில் படிக்கிறான். இந்த சிறுவன் வகுப்பறையில் இருந்தபோது சக மாணவனுடன் பேசியுள்ளார். வகுப்பு ஆசிரியை சிறுவனை கண்டித்துள்ளார். ஆனால் …
Read More »திருமணமான 2 நாளில் நகையுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்!!
திருமணமான இரண்டே நாட்களில் கணவனை ஏமாற்றிவிட்டு நகைகளுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்தது உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த விவசாயி அஜய் தியாகிக்கும், டேராடூனை சேர்ந்த கயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம்மானது. இவர்களது திருமணம் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. மணமகளுக்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து தங்க வெள்ளி நகைகள் வழங்கியுள்ளனர். இந்நிலையில், மணமகள் தனக்கு உடல் நலம் சரி இல்லை என்று கணவரை …
Read More »சிறுமிகளுக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது
தெலங்கானா மாநிலத்தில் சிறுமிகளுக்கு சாக்லெட் கொடுத்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த 85 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் குஷாய்குடாவை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி தன்னிடம் முதியவர் சத்யநாராயண ராவ்(85) என்பவர் தவறாக நடத்துக் கொண்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகர் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் முதியவரை கைது செய்தனர். சத்யநாராயண ராவ் ரயில்வே …
Read More »பாவம் செய்தால் கேன்சர் வரும்; சுகாதாரத்துறை அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு
பாவம் செய்தால் புற்றுநோய் வரும் என அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமண்ட பிஸ்வா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை சேர்ந்த அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமண்ட பிஸ்வா கவுகாத்தியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு ஆசிரியர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கடவுள் நாம் செய்த பாவங்களுக்காக நம்மை தண்டிப்பார். நாம் இளைஞர்களுக்கும் புற்றுநோய் வருவதை பார்த்திருக்கிறோம். அவர்கள் விபத்துகளில் சிக்குவதையும் பார்த்திருக்கிறோம். நீங்கள் …
Read More »துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்கள்..
துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை இரண்டு வாலிபர்கள் கற்பழித்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் வட மாநிலங்களில் மிகவும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காசியாபாத் நகரில் 28 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், கடந்த திங்கட்கிழமை பணி முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இத்தனைக்கும், அவருடன் பணிபுரியும் அவரை வீட்டின் அருகிலேயே இறக்கி விட்டு சென்றுவிட்டார். அப்போது, மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த …
Read More »