Friday , November 22 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் (page 12)

இந்தியா செய்திகள்

டெல்லியில் கடும் பனி மூட்டம்

டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் அதிகாலை வேளையில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லியில் கடும் குளிரும் காணப்படுகிறது. காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 28 ரயில்கள் தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக சாலையில் குறைந்த தூரமே கண்ணுக்கு புலப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனங்கள் …

Read More »

சிறுமிகளை கற்பழிக்கும் காம மிருகங்களுக்கு மரண தண்டனை?

சிறுமிகளை கற்பழிக்கும் காம மிருகங்களுக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யும் மசோதாவை மத்தியப்பிரதேச அரசு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுபோன்ற கொடூரங்கள் தொடராமல் இருக்கவும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களை முடிவுக்கு கொண்டு வரவும் மத்தியப்பிரதேச அரசு, சட்டசபையில் சமீபத்தில் ஒரு புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. சிறுமிகளை கற்பழிக்கும் காம மிருகங்களுக்கு மரண தண்டனை …

Read More »

மோடியின் சொந்த ஊரில் தோல்வியடைந்த பாஜக

Narendra Modi

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான ஊஞ்சா சட்டசபைத் தொகுதியில் பாஜக அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. குஜராத், இமாச்சல பிரதேஷ் தேர்தல்களின் முடிவுகள் நேற்று வெளியானது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 99 இடங்களைப் பிடித்து பாஜக வெற்றி பெற்றது, 77 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலில் பாஜக 44 இடங்களைப் பிடித்து வெற்றி …

Read More »

சுழற்றி அடித்த மோடி அலை ?

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் முடிவுற்றன. குஜராத் மாநிலத்தில் கடந்த டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இமாச்சலில் நவம்பர் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இன்று இவ்விரு தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து மோடி பின்வருமாறு …

Read More »

குஜராத், ஹிமாச்சலில் பாஜக முன்னிலை

குஜராத் மற்றும் ஹிமாச்சலபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்பொழுது எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக முன்னிலை வகிக்கிறது 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றன. இம்மாதம் 9ம் தேதி நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 14ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 68.41 சதவீத வாக்குகள் …

Read More »

அதிக இடங்களை கைப்பற்றி பாரதீய ஜனதா ஆட்சியை தக்க வைக்கும்

குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக கடந்த 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடந்தது. 182 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இந்த நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்திடும் என தேர்தலுக்கு பின் நடந்த கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுபற்றி டுடேஸ் சாணக்யாவின் …

Read More »

அரசால் இந்தியாவில் அனைவருக்கும் எய்ட்ஸ் வரும்; பாலிவுட் நடிகை சர்ச்சை பேச்சு

ஆணுறை விளம்பரங்களை பகல் நேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை செய்ததை அடுத்து ஆணுறை விளம்பரங்களை நிறுத்தினால் இந்தியாவில் அனைவருக்கும் எய்ட்ஸ் வரும் என பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆணுறை விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் மத்திய அரசு ஆணுறை விளம்பரங்களை தொலைக்காட்சியில் பகல் நேரங்களில் விளம்பரம் செய்ய தடை விதித்துள்ளது. இந்த தடையை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆணுரை …

Read More »

இந்தியா, இந்தோனேசியாவிற்கு சுனாமி ஆபத்து: ஜோதிடர் கணிப்பு!

சனிப்பெயர்ச்சி காரணமாக கடலுக்கு அடியில் உள்ள பூமி விலகுவதால் இந்தியா, ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் கடல் கொந்தளிக்கும் எனவும் சுனாமி வரும் எனவும், இந்தோனேசியாவில் அக்னி குழம்புகள் வெளிப்படும் எனவும் பண்டிதர் பச்சை ராஜென் கணித்துள்ளார். சனிப்பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது. வரும் 19-ஆம் தேதி செவ்வாய் கிழமை விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சன பகவான் இடம் பெயர்கிறார். நீர் ராசியில் இருந்து நெருப்பு …

Read More »

சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வா? காங்கிரஸ் மறுப்பு

சோனியா காந்தி சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் அவரால் நேரடியாக பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. மூத்த நிர்வாகிகளை வீட்டுக்கு அழைத்து கட்சி தொடர்பாக ஆலோசனை வழங்கி வந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக 11–ந் தேதி ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று (சனிக்கிழமை) முறைப்படி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கிறார். …

Read More »

போலீஸார் நடத்திய என்கவுண்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொலை

தெலுங்கானா மாநிலத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்ட வனப்பகுதியில் நக்சல்கள் சிலர் பதுங்கியிருப்பதாக அதிரடிப் படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப் படையினர் வனப்பகுதியை சுற்றி வளைத்தனர். வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் அதிரடிப் படை போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனை எதிர்பார்காத அதிரடிப்படையினர் சுதாரித்துக்கொண்டு, நக்சல்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர். …

Read More »