கிரீன் டீ என்பது பலருக்கும் தெரிந்த பானமாகும். உடல் எடையை குறைக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என இதன் பயன்கள் பற்றி பலர் அறிந்திருப்பார்கள்.
சரி, கிரீன் காபியை பற்றி தெரியுமா? அதன் அற்புத பயன்களை பற்றி கேள்விபட்டதுண்டா?
கிரீன் காபி தயாரிக்கப்படும் விதைகளில் சாதா காபி விதையை விட குளோரோஜினிக் ஆசிட் அதிகளவில் அடங்கியுள்ளது. இதனால் இதை பருகுவதில் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கை குணம் கிரீன் காபிக்கு இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதில் இருக்கும் குளோரோஜினிக் ஆசிட் இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் கட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது.
இதில் இருக்கும் வேதி பொருளானது உடல் உறுப்புகளை திறம்பட செயல்பட வைக்கிறது.
கிரீன் காபியில் அடங்கியிருக்கும் விட்டமின் பி மற்றும் குரோனியம் கணையசுரப்பு பிரச்சனையை குறைப்பதுடன், சர்க்கரை அளவு உடலில் அதிகளவில் ஏராமல் தடுக்கிறது.
கிரீன் காப்பி பீன்ஸ் கொட்டைகளில் அடங்கியிருக்கும் சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பதுடன், நாள் முழுவதும் உடலை புத்துணர்ச்சியாக இருக்க வைக்க உதவுகிறது.
சூடு செய்து வேகவைக்காத காபி பீன்ஸ் கொட்டைகளில் மூளை நரம்பு பகுதியை சுறுசுறுப்பாக்கும் திறன் உள்ளது.
கீரீன் காபியில் கேப்பைன் என்னும் நச்சு பொருட்கள் இல்லாததால் இது உடலுக்கு எந்தவொரு தீங்கயும் விளைவிப்பதில்லை
கிரீன் காபியில் அடங்கியிருக்கும் குளோரோஜினிக் ஆசிட் மன அழுத்தத்தை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை அதிகளவில் குறைக்கவும் உதவுகிறது.
இந்த காபியானது உடல் சோர்வை நீக்குவதுடன், கல்லீரலில் இருக்கும் கொழுப்புகளையும் சரி செய்து கல்லீரலை பாதுகாக்கிறது.