கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததும் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொது மக்கள் அடிப்படை வசதிகளற்ற மாதிரிக்கிராமங்களில் மீள்குடியேற்றப்பட்டு பல்வேறு பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் இதுவரை அவற்றிற்கு எந்தவொரு தீட்வும் கிடைக்காத நிலையில் தொடர் கவனயீர்ப்பு …
Read More »மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிவு; பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு
கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்திலுள்ள குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மீத்தொட்டமுள்ள குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் அரசாங்க செலவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் …
Read More »கனகபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி பலி
கிளிநொச்சி கனகபுரம் வீதியில், இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 3 பெண்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை கோணாவில் பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்டு, கப் ரக வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த நால்வரையும் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், அதில் திருநகரைச் சேர்ந்த தவராஜா விஜிதா (வயது 22) …
Read More »சிறிலங்காவுக்கான வரட்சி நிவாரணம் – இந்தியாவுடன் பாகிஸ்தான், சீனா ஏட்டிக்குப் போட்டி
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள வரட்சியைச் சமாளிப்பதற்கு 1 பில்லியன் ரூபா பெறுமதியான 90 நீர்த்தாங்கி பாரஊர்திகளை வழங்க சீனா முன்வந்துள்ளது. சீன மக்கள் ஆலோசனை கலந்துரையாடல் சபையின் தேசிய குழு தலைவரான யூ செங்சென் சிறிலங்காவுக்கு கடந்த 6ஆம் நாள் தொடக்கம், 8ஆம் நாள் வரை மேற்கொண்டிருந்த பயணததின் போது இந்த உதவியை வழங்க முன்வந்துள்ளார். சிறிலங்காவில் நிலவும் மோசமான காலநிலையை சமாளிப்பதற்கும்.சிறிலங்கா மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் இந்த உதவி …
Read More »நில மீட்புப் போராட்ட மன்னார் மக்களுக்கு சர்வமதத் தலைவர்கள் ஆதரவு
மன்னாரில் நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மறிச்சுக்கட்டி மற்றும் முள்ளிக்குளம் மக்களுக்கு இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்கள் நேரில் சென்று தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பிற்கு மன்னார் மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளையும் தேசிய உலமா சபையின் தலைவர்களும் தலைமை தாங்கியுள்ளனர். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வில்பத்து சரணாலயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி மன்னார் …
Read More »அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க முடியாது; டி.எம்.சுவாமிநாதன்
அரசியல் கைதிகளை விடுப்பதற்கு அரசாங்கத்தில் சட்ட ரீதியான முறையொன்று உள்ளதாகவும் இதன் அடிப்படையிலேயே செயற்பட முடியும் எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கைதிகள் தங்கள் விடுவிப்பு தொடர்பில் மனுக்களை அளித்துள்ளதாகவும் இதுகுறித்து சட்ட ரீதியாக ஆராய்ந்த பின்னரே அவர்களை விடுவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி சபையினால் அமைக்கப்பட்ட கற்பகசோலை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிலையம், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு …
Read More »ஆவா குழு உறுப்பினர்கள் ஐவர் கைது
யாழ்ப்பாணத்தில் ஆவா குழு உறுப்பினர்கள் ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி அல்லாரை, மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலலேயே இந்த ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 19 வயதிற்கும் 21 வயதிற்கும் உட்பட்டவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த ஐந்து பேரும் ஆவா குழுவுடன் ஏற்கனவே தொடர்புகளை வைத்திருந்ததாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக …
Read More »சர்வஜன வாக்கெடுப்பு குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும்
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா – இல்லையா என்பதை, நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற வழிகாட்டல் குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வழிகாட்டல் குழுவின் உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பு மறுசீரமைப்பின் பொருள் மற்றும் வரைவு அறிக்கையை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. அது ஒரு புதிய அரசியலமைப்பா அல்லது …
Read More »தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றச்சாட்டு
பொறுப்புக் கூறும் விடயத்தில் உதாசீனமாக இருந்துவரும் ஸ்ரீலங்காவை ஐ.நா வின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கு இருந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் தவறவிட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார். ஜெனீவாவில் நடந்துமுடிந்த ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்காவிற்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியதன் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிகளான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் …
Read More »மீண்டும் மீண்டும் யுத்தத்தைக் காரணம் காட்டிக் கொண்டிருக்க முடியாது : மட்டு. மேற்கு வலய கல்விப்பணிப்பாளர்
மீண்டும் மீண்டும் பத்து வருடத்துக்கு முந்திய யுத்தத்தைக் காரணம் காட்டிக் கொண்டிருக்க முடியாது. கடந்த காலங்களில் நடந்தவைகளால் பாதாளத்துக்குப் போய்விட்டோம். இனி எழும்ப வேண்டிய காலம். ஒரு பந்தை அடித்தால் அது மேலே எழும்ப வேண்டும் அது போலத்தான் சமூகமும். அவ்வாறில்லாவிட்டால் அச்சமூகம் அழிந்து போகக்கூடிய சமூகமாக இருக்கும் என மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் கனகசூரியம் அகிலா தெரிவித்தார். மண்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலளப்பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் …
Read More »
Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Global Tamil News,Daily Tamil News, Sri Lankan News,india breaking news,Tamil online news,Tamil website,Tamil Daily News Website,Sri Lanka News Online,sri lanka news, tamil news, tamil web site,tamil news site,latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news,top news, lifestyle news, daily news update,தமிழ் செய்தி,இலங்கை செய்தி,சிறிலங்கா,இலங்கை செய்திகள்,இலங்கை தமிழ் செய்திகள்,இலங்கை செய்தி,தமிழ் செய்திகள்,tamil news today,tamil news cinema,tamil news daily,tamil news for today,tamil news jaffna,Tamil News Paper,tamil news paper,tamil news paper,Jaffna news,jaffna news today