இன்சூரன்ஸ், மதிப்பு கூட்டு வரி உயர்வை கண்டித்து தென்னிந்தியா முழுவதும் 30 லட்சம் லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்கவும் உத்தரவிட்டது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகள் …
Read More »தி.மு.க. தான் எங்களின் பிரதான எதிரி – அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் – ஜெ.தீபா பேட்டி
‘தி.மு.க. தான் எங்களுக்கு பிரதான எதிரி’ என்றும், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களை எதிர்க்கும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்’ என்றும் ஜெ.தீபா கூறினார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தேர்தல் பணிமனையை பேரவையின் பொது செயலாளர் ஜெ.தீபா திறந்து வைத்தார். இந்த விழாவில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி, மாவட்ட பொறுப்பாளர்கள் குமரி செந்தில்குமரன், கடலூர் செல்வவிநாயகம், மற்றும் செல்வராஜாமணி …
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை சரித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் மற்றும் தொடரின் நாயனாக தேர்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீரர் ரவிந்திர ஜடேஜா ஒட்டு மொத்தமாக 25 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்துள்ளார். 118 இன்னிங்சில் 213.1 ஓவர்களை வீசியுள்ள அவர் 464 ரன்கள் கொடுத்து …
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி – தொடரை 2-1 இந்தியா அசத்தல்
தரம்சாலாவில் நடந்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. …
Read More »ஜம்மு காஷ்மீரில் கலவரக்காரர்களை கலைப்பதற்கு மிளகாய்ப்பொடி குண்டுகள் தோல்வியடைந்தால் பெல்லட் குண்டுகளை ராணுவம் பயன்படுத்தலாம்
ஜம்மு காஷ்மீரில் கலவரக்காரர்களை கலைப்பதற்கு மிளகாய்ப்பொடி குண்டுகள் பயன் அளிக்கவில்லை என்றால் பெல்லட் துப்பாக்கிகளை ராணுவம் பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக கலவரத்தில் ஈடுபடுவோரைக் கலைப்பதற்காக பாதுகாப்பு படையினர் பெல்லட் ரக குண்டுகளை பயன்படுத்துகின்றனர். இந்த பெல்லட் ரக துப்பாக்கியில் இருந்து ஒருமுறை சுடும்போது, அது நூற்றுக்கணக்கான குண்டுகளை ஒரே சமயத்தில் அதிவேகத்தில் வெளியிடும். இந்த குண்டுகள் தாக்கினால் உயிர்ச்சேதம் ஏற்படாது. …
Read More »பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதி குருதேவ்சிங் பாதல் காலமானார்
பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான குருதேவ்சிங் பாதல் இன்று காலை காலமானார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிரோன்மணி அகாலிதள கட்சியில் முத்த தலைவராக இருந்த 85 வயதான குருதேவ்சிங் பாதல் இதய நோய் காரணமாக இன்று காலை லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். குருதேவ்சிங் பாதல் இதற்கு முன்னர் பாஞ்க்ரைன் மற்றும் ஜைடொ ஆகிய தொகுதிகளில் இருந்து சட்டசபை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மறைந்த பாதலுக்கு இரண்டு …
Read More »டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியுடன் சந்திப்பு
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் இன்று மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த 14–ந் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. விவசாயிகள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை …
Read More »வட மாநிலத்தவர்களின் புத்தாண்டு உகாதி பண்டிகை – ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து
வட மாநிலத்தவர்களின் புத்தாண்டாக கொண்டாடப்படும் உகாதி பண்டிகையையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வட மாநிலங்கள் மற்றும் தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்களின் புத்தாண்டாக யுகாதி திருநாள் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் யுகாதி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா …
Read More »பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஒரு பெண் உள்பட 4 தீவிரவாதிகள் டாக்காவில் சுட்டுக் கொலை
வங்கதேசம் நாட்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஒரு பெண் உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்தாண்டு ஜூலை மாதம் வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள உணவு விடுதியில் வெளிநாட்டினரை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய ஜமாத் உல் முஜாகிதீன் பங்ளாதேஷ் (ஜே.எம்.பி) என்ற தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலில் மூளையாக செயல்பட்டது கண்டறியப்பட்டது. டாக்கா …
Read More »மனித மூளையுடன் கம்ப்யூட்டரை இணைத்து செயற்கை நுண்ணறிவு புகுத்தும் திட்டம்: புதிய நிறுவனம் துவங்கும் எலான் மஸ்க்
மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை எலான் மஸ்க் துவங்குகிறார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், நியூராலின்க் எனும் நிறுவனத்தை துவங்குகிறார். நியூராலின்க் நிறுவனத்திற்கான துவக்க கால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மனித மூளையுடன் இணைந்து செயல்படும் சாதனங்களை நியூராலின்க் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூராலின்க் உருவாக்கும் சாதனங்கள் மனிதர்களை மென்பொருள்களுடன் …
Read More »