ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ளது கெர்கி. இங்கு வசித்து வந்தவர் கன்யா தேவி. வயது 40. இவரது கணவர் ஒரு மாதத்துக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து மகன் மற்றும் மகளுடன் வசித்துவந்த அவரை, உறவினர்கள் சூனியக்காரி என்ற கூறினர். இதையடுத்து அவரை அடித்துக் கொடுமைப் படுத்தி, மனிதக் கழிவை சாப்பிட வைத்தனர். பின்னர் சாகும்வரை அடித்தேக் கொன்று எரித்துவிட்டனர். இந்தச் சம்பவம் கடந்த 3-ம் தேதி நடந்துள்ளது. இது …
Read More »சுதந்திர தின விழா ஒத்திகை
சுதந்திர தினவிழாவையொட்டி தலைநகர் டெல்லியில் முழு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்லி ராஜபாதையில் நடைபெறவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும், முழுச் சீருடை அணிந்த பாதுகாப்புப் படையினர் நடத்திப் பார்த்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, செங்கோட்டை, தூதரகங்கள் உள்ளி்ட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு …
Read More »நாடு முழுவதும் ஒரே மின் கட்டணம்
நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் யோசனை கூறியுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ரயில்வே கட்டணங்கள் போல் மின் கட்டணங்களும் நாடெங்கும் ஒரே சீராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். பீகாரில் அனைத்து பகுதிகளுக்கும் அடுத்தாண்டு இறுதிக்குள் மின்சார வசதி செய்து தரப்படும் என்றும் …
Read More »மதிப்பிழந்து வருகிறதா பொறியியல் படிப்பு?
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலைகழகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. பொறியியல் பல்கலைக்கழகங்களில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர். இவர்கள் தரவரிசை பட்டியலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 86ஆயிரத்து 355 இடங்கள் மட்டுமே நிரம்பின. கலந்தாய்வில் …
Read More »மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் இழைத்துவிட்டது!
நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதில் தோல்வியடைந்த தமிழக அரசு மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருப்பதாகப் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறும் மசோதாவுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறத் தமிழக ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகளைக் குடியரசுத் தலைவர் தேர்தலின்போது வலியுறுத்தவும் …
Read More »இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் களமிறக்கப்படுகிறது!
எதிரிகளுடன் சண்டையிட இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கவும், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களை ஒடுக்கவும் நம் ராணுவ வீரர்கள் இரவு பகலாக போராடிவருகின்றனர். இதனால் ஏற்படும் உயிர்சேதங்களை குறைக்கும் வகையில், பாதுகாப்பு பணிகளுக்காக எல்லையில் ரோபோக்களை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டிருந்தது. இதையடுத்து ரோந்து பணிகள் மேற்கொள்வது, வெடிபொருட்களை கொண்டுசெல்வது உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 544 ரோபோட்கள் தேவைப்படுவதாக …
Read More »தொலைபேசி உரையாடல், வாட்ஸ் அப்-ஐ கண்காணிக்க மத்திய அரசின் தொழில்நுட்பம் ரெடி!
இந்தியாவில் நடக்கும் தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளையும் கண்காணிக்க மத்திய அரசு தொழில்நுட்பம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் கீழ் பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்கள், வாட்ஸ் அப் உரையாடல்கள் போன்ற அனைத்தையும் கண்காணிக்க முடியும். இதற்காக நாடு முழுவதும் 20 இடங்களில் மத்திய கண்காணிப்பு மையங்கள் செயல்படத்துவங்கிவிட்டன. கூடுதலாக ஒரு கண்காணிப்பு மையமும், இந்த மையத்துக்கான பேரழிவு மீட்புக்குழு ஆகியவை இந்த ஆண்டு இறுதிக்குள் செயலுக்கு வர …
Read More »பாலின பாகுபாடு காட்டப்படுவதாக புகார் கூறிய பொறியாளர் பதவி நீக்கம்
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டில் பொறியாளராக பணிபுரிபவர் ஜேம்ஸ் டோமோர். இவர் கடந்த வாரம் அந்நிறுவனத்தில் நடக்கும் பாலின பாகுபாடு குறித்து அறிக்கை ஒன்றை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அதில், நிறுவனத்தில் ஆண்-பெண் பாகுபாடு அதிகம் பார்க்கப்படுகிறது என்றும், பெண்களுக்கு தொழில்நுட்பத்துறை மற்றும் தலைமை பொறுப்பு போன்ற பதவிகளை கொடுக்க மறுக்கின்றனர் என எழுதியிருந்தார். ஜேம்ஸ் டோமோரின் இந்த அறிக்கை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி …
Read More »காந்தி ஜெயந்தி நீக்கப்பட்டதற்கு குவியும் கண்டனம்!
ராஜஸ்தான் மாநில அரசு மாநில பல்கலைக்கழகங்களுக்கு வெளியிட்ட விடுமுறை கால அட்டவணை பட்டியலில் காந்தி ஜெயந்தி நீக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆண்டுதோறும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளிப்பது வழக்கம். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு, அதன்கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு வெளியிட்ட விடுமுறை கால அட்டவணை பட்டியலில் இருந்து காந்தி ஜெயந்தியை நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி …
Read More »ஓஎன்ஜிசி குறித்து அதிகாரிகள் விளக்கம்!
ஓஎன்ஜிசி செயல்பாட்டால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஒஎன்ஜிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கதிராமங்கலத்தில் ஒஎன்ஜிசிக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கும்பகோணத்தில் ஒஎன்ஜிசி நிறுவன மேலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். அப்போது, ஓஎன்ஜிசி மீது தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். எரிசக்தி தேவை நிறைவேற்றப்பட்டல்தான் நாடு முழுமையாக வளர்ச்சி அடையும் என்று கூறிய அவர், போராட்டக்காரர்கள் தவறான எண்ணத்தை மக்களிடம் உருவாக்கி …
Read More »