Wednesday , February 5 2025
Home / அருள் (page 311)

அருள்

இரு அணிகளும் விரைவில் இணையும்

திருவாரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு தின விழாவில் பங்கேற்க சென்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை ஜெயலலிதா கண்ணை இமை காப்பதைப்போல காத்து வந்தார். தொடர்ந்து தமிழக மக்களுக்கு தனது ஆட்சியில் ஏராளமான திட்டங்களையும், நலன்களையும் அளித்து வந்தார். அவர் விட்டுச் சென்ற ஆட்சி சிறப்பாக வழி நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இடையிலே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இப்போது பேச்சுவார்த்தைகள் மூலமாக சரி …

Read More »

Big Boss’-ஐ மிஞ்சிய அதிமுக அணிகள் இணைப்பு

அதிமுகவில், அணிகள் இணைப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியையே மிஞ்சிவிட்டதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதைக் கூறினார்.

Read More »

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து

இந்தியாவின் சுதந்திர தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொடங்கியிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்தார். இந்தியாவின் எரிபொருள் தேவையை அமெரிக்கா நீண்ட கால அடிப்படையில் பூர்த்தி செய்யும் என்றும் டிரம்ப் உறுதியளித்ததாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்றுதிரட்டியதற்காக அமெரிக்க அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி …

Read More »

ட்ரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு

வெள்ளை இனவாத அமைப்புகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவிக்கவில்லை எனக் கூறி அமெரிக்காவின் வர்த்தகக் குழுக்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் தங்களது பதவிகளில் இருந்து விலகி இருக்கிறார்கள். இதனால், அவர் அமைத்திருந்த இரு முக்கிய தொழில் கூட்டமைப்புகளைக் கலைக்க வேண்டியநிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை சார்லட்ஸ்வில் நகரில் நடந்த வன்முறைகளுக்கு வெள்ளை இனவாத அமைப்புகள், அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்க‌ள் ஆகிய இரு தரப்புமே காரணம் என ட்ரம்ப் …

Read More »

இனவாத விவகாரத்தில் மவுனம் கூடாது: அமெரிக்க அமைச்சர்

அமெரிக்காவில் வெள்ளை இனவாதத்தை ஆதரிப்போருக்கும், நாஜி கருத்துகளைக் கடைப்பிடிப்போருக்கும் அந்நாட்டு முன்னாள் போர் வீரர்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் டேவிட் சுக்லின் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் அதிபர் ட்ரம்ப் தொடர்பாக அவர் எந்த கருத்தையும் கூறவில்லை. தாம் கூறியிருப்பது தமது சொந்தக் கருத்து என்றும் அவர் தெரிவித்தார். வரலாற்றைப் புரிந்து கொண்டிருக்கும் நாம் அமைதியாக இருப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வெள்ளை இனவாத எதிர்ப்புப் பேரணியில் ஒரு பெண் …

Read More »

இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் நியமனம்

இலங்கை கடற்படையின் 21ஆவது தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவால் நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படையின் தற்போதிய தளபதியாக இருக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன‌ பாதுகாப்பு படைகளின் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

நெடுவாசல் மக்கள் சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம் ?

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசல் பகுதி மக்கள் 126வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வாணக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுதந்திர தினமான …

Read More »

எல்லையில் நிலவும் அசாதாரண சூழல்

இந்தியா – ரஷ்யா நாடுகளின் முப்படைகள் இணைந்து அக்‍டோபர் மாதம் மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்தியா முதல் முறையாக அண்டை நாட்டுடன் இணைந்து முப்படைகளின் போர் பயிற்சிகளை ரஷ்யாவில் மேற்கொள்ள உள்ளது. ரஷ்யாவுடன் இணைந்து இந்திரா என்ற பெயரில் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளது. இந்த கூட்டுப் பயிற்சியில் இரு நாடுகளின் தரைப்படை, …

Read More »

தினகரன் நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்க கூடாது

தமிழக அரசை கவிழ்க்க நினைப்பது பெரும் துரோகம் எனக் கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், தினகரன் எப்போதும் நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்க கூடாது என தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அரசை கவிழ்க்க நினைப்பது பெரும் துரோகம் அதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் டிடிவி தினகரன் நிதானத்தை இழந்துவிடக்கூடாது. தினகரனின் குடும்ப …

Read More »

வடகொரியாவுடன் இறக்குமதியை நிறுத்திக் கொள்ளும் சீனா

வடகொரியாவுடன் இறக்குமதி செய்த பொருட்களை செப்டம்பர் 5-ம் தேதியுடன் நிறுத்திக் கொள்ள இருப்பதாக சீனா கூறியுள்ளது. வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த புதிய பொருளாதாரத் தடைக்கும் ஐ. நா பாதுகாப்பு சபையிலுள்ள 15 நாடுகள் ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து வடகொரியாவுடனான இறக்குமதியை நிறுத்திக் கொள்ள இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா தரப்பில், “ஐக்கிய நாடுகளின் தடையை மீறி அணுஆயுத ஏவுகணை சோதனைகளை மேற்கொண்ட வடகொரியாவுடனான இறக்குமதியை …

Read More »