ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஊழல் பற்றி கருத்து கூறாத கமல்ஹாசன், தற்போது ஏன் விமர்சித்து வருகிறார் என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் கோட்டை மைதானத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் 11-ம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக வளர முதன்முதலில் பிரசாரம் செய்தேன் என்று குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா …
Read More »தெருநாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற அதிமுக பிரமுகர்!
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் விஷம் வைத்து 15 தெரு நாய்களை கொன்ற அதிமுக பிரமுகர் மீது வழக்கு தொடரக் கோரி தேசிய விலங்குகள் நல வாரியத்தினர் புகார் அளித்துள்ளனர் சென்னை பள்ளிக்கரணை அடுத்த சித்தாலப்பாக்கத்தில், அதிமுக பிரமுகர் அண்ணாதுரை வசித்து வருகிறார். தமது வீட்டில் வளர்த்து வரும் கோழிகளை தெரு நாய்கள் துரத்துவதால், ஆத்திரமடைந்த அவர், கடந்த 25-ஆம் தேதி, இறந்த கன்று குட்டி உடலில் விஷத்தை கலந்து வயல்வெளியில் …
Read More »முதல்வர் தலைமையில் நிறைவேற்றப்பட்ட 4 தீர்மானங்களும் செல்லாது
ஜெயா தொலைக்காட்சி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழைக் கைப்பற்ற முயன்றால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு, தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயா தொலைக்காட்சியும், நமது எம்.ஜி.ஆர் நாளிதழும் தனியார் சொத்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். அவற்றைக் கைப்பற்ற முயற்சி நடக்குமானால் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். தனியார் …
Read More »எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது
திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி கூறியபடி ஜனநாயக முறைப்படி திமுக ஆட்சியை பிடிக்குமே தவிர கொள்ளைப்புறம் வழியாக அல்ல எனத் தெரிவித்தார். குட்கா விவகாரத்தில் திமுக உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு வரவிடாமல் தடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு …
Read More »கடவுளை தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது
கடவுளை தவிர எங்களை யாராலும் மிரட்ட முடியாது என அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடவுளைத் தவிர எங்களை யாராலும் மிரட்ட முடியாது. கடவுளுக்கும், உண்மைக்கும் மட்டுமே நாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்றார். தியாகத்திற்கும் துரோகத்திற்குமான யுத்தம் நடைபெறுகிறது. மக்களை காப்பற்ற வேண்டும் என்ற தியாக உணர்வோடு 19 எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் தங்கி உள்ளனர். தமிழகம் மட்டுமல்ல இந்திய துணைக் …
Read More »தேர்தலை சந்திக்கின்ற சூழலில் தமிழகம் இல்லை
மீண்டும் தேர்தலைச் சந்திக்கும் சூழலில் தமிழகம் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உடனே தேர்தலை சந்திக்கின்ற நிலையில் தமிழகம் இல்லை. ஓராண்டுக்கு முன்னர் தான், நாம் தேர்தலை சந்தித்து இருக்கிறோம். இரண்டு அணிகள் இணைந்திருக்கிறார்கள். சிறிது கால அவகாசம் கொடுக்கலாம். மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும் தருவதற்கு தயாராக இருக்கிறது. அதனால் அதிமுக-வை சேர்ந்த இரு அணிகளும் இணைந்ததை …
Read More »நிர்வாகி நீக்கத்திற்கு எதிர்ப்பு
திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் நீக்கப்பட்டதை கண்டித்து, டிடிவி தினகரனின் உருவ பொம்மையை எரித்து அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக உள்ள முன்னாள் மேயர் மருதராஜை நீக்கிவிட்டு, தங்கதுரை மற்றும் நல்லசாமி ஆகியோரை டிடிவி தினகரன் நியமித்தார். இதனைக் கண்டித்து எம்ஜிஆர் சிலை முன்பு திரண்ட 100-க்கும் மேற்பட்ட அதிமுக-வினர், தினகரனின் உருவப்பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செந்தில்நாதன் …
Read More »தியாகத்திற்கும் துரோகத்திற்கும் இடையே யுத்தம்
தமிழகத்தில் தியாகத்திற்கும், துரோகத்திற்கும் இடையேயான யுத்தம் நடைபெற்று வருவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 122 எம்.எல்.ஏக்களும் எங்கள் ஆதரவாளர்கள் தான். ஆனால் அதில் ஒரு சிலர் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் சுயநலத்துடன் செயல்பட்டு வருகின்றனர். வாக்காளர்கள் எந்த மனநிலையில் உள்ளனர் …
Read More »துப்பாக்கிச் சுடுதலில் தமிழகம் சிறந்து விளங்குகிறது
தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருவதால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழக அணி தேசிய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். 9-வது தெற்கு மண்டல துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆவடியை அடுத்த வீராப்புரம் காவல்துறை பயிற்சி மையத்தில் நடைபெற்றது, இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி …
Read More »எடப்பாடி பழனிசாமி கட்சிப் பதவி பறிப்பு: தினகரன் அதிரடி
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். அதிமுகவின் 19 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்ஸில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் டிடிவி. தினகரன், அதிரடி நடவடிக்கையாக கட்சி பொறுப்பில் உள்ளவர்களின் பதவியை பறித்து வருகிறார். அவர்களுக்குப் பதிலாக, வேறு நபர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் …
Read More »