Wednesday , August 27 2025
Home / அருள் (page 307)

அருள்

பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக இரையாகக் கூடாது

தமிழக அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தோழமை கட்சி எம்எல்ஏக்களான மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமூன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு மற்றும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் ஆகியோர் இன்று கூட்டாக ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்த அவர்கள், தினகரனை ஒதுக்கி வைத்து விட்டு நல்லாட்சி தர முடியாது என்று தெரிவித்தனர். மேலும் தினகரன் தரப்பு எம்எல்ஏக்களை அழைத்துப் பேச …

Read More »

அதிமுகவின் பிரச்னைகளை சரி செய்யும் மருத்துவர் டி.டி.வி தினகரன்

சென்னையில், டிடிவி தினகரனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் உயிருக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அவரை பாதுகாத்தவர்கள், சசிகலா குடும்பத்தினர்தான் என கூறினார். எடப்பாடி பழனிசாமியையோ, ஓ. பன்னீர் செல்வத்தையோ தலைவர்களாக ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட நடிகர் செந்தில், தேர்தலைச் சந்தித்து முதலமைச்சரானால் மட்டுமே அவர்களை ஏற்க முடியும் என்றும் தெரிவித்தார். தனக்குப் பிறகும் 100 ஆண்டுகளைக் கடந்தும் அதிமுக மக்கள் நலனுக்காகப் பாடுபடும் இயக்கமாகத் திகழும் …

Read More »

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை மறுநாள் முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டைன அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீருடை அணிந்த எந்த காவல்துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும் போது …

Read More »

மண்டைதீவு கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் கடலில் மூழ்கி மரணம்…

இச் சம்பவம் நேற்று மதியம் 01.30 பிற்பகல் இடம்பெற்றது. குறித்த சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளன, உரிய பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சடலங்களை பொறுப்பேற்குமாறு பணிப்புரை. 18 முதல் 20 வயதுக்கிடைப்பட்ட மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இன்று கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி சென்ற போது …

Read More »

நோர்வே தமிழ் மாணவரொருவர் துரண்ணியம்(trondheim ) பகுதியில் சடலமாக மீட்பு

நோர்வே நிடேல்வா(nidelva ) பகுதியில் தமிழ் மாணவன் ராகவன் ஜீவகரன் வயது 21, திங்கள் அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,ராகவன் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான எந்த சான்றுகளும் இல்லை. ராகவன் ஆகஸ்ட் 15 முதல் காணாமல் போயிருக்கின்றார். அதன் பின்னர் அவரது சடலத்தை போலீசார் நிடேல்வா(nidelva ) பகுதியில் திங்கள் இரவு அன்று பழைய பாலத்தின் கீழே கண்டுபிடித்தனர். செவ்வாய்கிழமையன்று அச் சடலம் ராகவன் உடையது …

Read More »

அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா களமிறக்கும் புதிய ஆயுதங்கள்!

திட எரிபொருளைப் பயன்டுத்தி இயங்கக்கூடிய ராக்கெட் எஞ்சின்களைத் தயாரிக்க வடகொரிய அதிபர் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். கொரிய தீபகற்பப் பகுதிகளில் பதற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுவந்த வடகொரியாவுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அமெரிக்கா கொண்டுவந்தது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா அறிவித்ததால் …

Read More »

சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட, பிரபல சீக்கிய சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். பாலியல் வழக்கில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் குற்றவாளி என, கடந்த இரு தினங்களுக்கு முன்னர், பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதனை அடுத்து, அவர் ரோதக் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில், …

Read More »

டெல்லியில் எலும்புகளை தின்று போராடும் தமிழக விவசாயிகள்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளை தின்று, இன்று போராட்டம் நடத்தினர். வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக விவசாயிகளின் போராட்டம் 44ஆவது நாளாக இன்று நீடிக்கிறது. நாள்தோறும் பல்வேறு விதமாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், மனித …

Read More »

என் சாதி இருக்கும் தெருவில் நுழையாதே ?

வேறு சமூகத்தினரின் தெருவில் இருச்சக்கர வாகனத்தில் சென்றதற்காக, தலித் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் புதன்சந்தை அருகே அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் தீரஜ்குமார். இவர் கடந்த 22-ம் தேதி மற்றொரு சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தெரு வழியாக, வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றதாக தெரிகிறது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த நாகுல், பொம்மாயி ஆகியோர், தீரஜ்குமாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் …

Read More »

பத்திரிக்கை வைப்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி கொள்ளை

நெல்லை சந்திப்பு பகுதியில், ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு, 37 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களை பெரும் அச்சமடைய வைத்துள்ளது. நெல்லை சந்திப்பு செல்வி நகர் பகுதியை சேர்ந்தவர் வல்லவன். இவரது மனைவி கோமதி. நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, திருமண பத்திரிக்கை வைப்பது போல் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 3 பேர், கோமதியை கட்டையால் தாக்கினர். பின்னர் வீட்டிலிருந்த …

Read More »