மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் …
Read More »பெரும்பான்மையை நெருங்குகிறார் மகிந்த…? அரசியல் நெருக்கடி முடிவுக்கு வருமா…?
இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலை அடுத்து வரும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து யார் பிரதமர் என்பதை உறுதி செய்யும் போட்டியில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய நிலவரப்படி இன்னும் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களே மஹிந்தவின் பெரும்பான்மைக்கு தேவைப்படுகிறது. 126 என்ற அதிக பெரும்பான்மை உறுப்பினர்களை தன்வசம் வைத்திருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது …
Read More »கூட்டமைப்பின் மற்றொரு எம்.பியும் கட்சி தாவ ஆயத்தம்!! அதிர்ச்சியில் சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சி தாவுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிலிருந்து கட்சி தாவிப் பிரதி அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட வியாழேந்திரனுக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினரே, விரைவில் கட்சி தாவக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கனடாவுக்குச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், நாடு திரும்பும் போது, கட்சி தாவக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினரும் அலைபேசியில் கதைத்துள்ளார். கட்சி …
Read More »மஹிந்தவிற்கு முக்கிய அழைப்பு
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுவின் கூட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கட்சியின் …
Read More »தமிழர்களுக்கு மீண்டும் துரோகம் செய்த கருணா!
கொழும்பு அரசியல் மட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையில், பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த தரப்பு பேரம் பேசி வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்து பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை மஹிந்த அணி வாங்கி உள்ளது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த தமிழ் உறுப்பினரும் அடங்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைந்து அதன் உறுப்பினர்களை மஹிந்த அணியுடன் சேர்க்கும் நடவடிக்கையை முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) முன்னெடுத்துள்ளார். நேற்றைய தினம் …
Read More »இன்றைய ராசிபலன் 04.11.2018
மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கு சாதக மாக திரும்பும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங் களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் …
Read More »மீண்டும் இன்று கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் (அமல்) மகிந்த அணிக்கு தாவியுள்ள நிலையில், அதனால் எழுந்துள்ள நெருக்கடி நிலமை மற்றும் நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு எத்தகையை நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று காலை மீண்டும் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்ட முடிவில் சிறப்பு ஊடக அறிக்கை வெளியிடப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நேற்று …
Read More »இலங்கை ஜனாதிபதிக்கு ஐ.நா பொதுச்செயலர் வலியுறுத்தல்!
சிறிலங்காவில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா அதிபருக்கும், ஐ.நா பொதுச்செயலருக்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலின் போதே, ஐ.நா பொதுச் செயலர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறிலங்கா அதிபர் மைத்திரிபால …
Read More »மஹிந்த அணிக்கு தாவும் மற்றுமொரு முக்கியபுள்ளி!
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மகிந்த தலைமையிலான அரசாங்கத்திடம் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும் அதற்கு அவர்கள் அந்த அமைச்சுப் பதவியை தருவதற்கு இணங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் பேரம் பேசப்படுவதாகவும் அவர் கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
Read More »மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்!
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இத்தகைய சந்தர்ப்பத்தில் நடுநிலைமை வகிப்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து மகிந்த தரப்புக்கு மாறிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »