ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு கங்காராம விகாரைக்கு அருகில் இந்த மெழுகுவர்த்திப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நேற்றைய தினம் சிலாபம் முன்னேஷ்வரம் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டதாகத் …
Read More »நாட்டு மக்களுக்கு திடீர் இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்த
இலங்கையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான தொலைபேசி அழைப்புக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான தொலைபேசி அழைப்பு சேவை நிறுவனத்தினால் நூற்றுக்கு 10 வீதம் தொலைபேசி அழைப்புக்கான வரிப்பணம் குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் மக்களுக்கு வரி நிவாரணங்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதன் ஒரு கட்டமாக தொலைபேசி அழைப்புக்கான வரிப்பணத்தை குறைப்பதற்கு, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
Read More »மகனை தொடர்ந்து திடீரென கட்சி தாவிய மகிந்த
பிரதமர் மகிந்த ராஜபக்ச சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுண கட்சியில் சற்றுமுன்னர் உறுப்பினராக இணைந்துகொண்டுள்ளார். அவருடன் மேலும் பல சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »இன்றைய ராசிபலன் 11.11.2018
மேஷம்: இன்று நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம்: இன்று எடுத்துக் கொண்ட முயற்சிகளில் …
Read More »ரணில் திடீர் பதவி விலகல் ?
நாட்டில் ஏற்பட்டிருக்கும் திடீர் அரசியல் மாற்றத்தை தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை ரணில் விக்கிரமசிங்க ராஜனாமா செய்ய உத்தேசித்துள்ளதாக கொழும்பு ஐ.தே.கட்சி உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணிலின் பதவி விலகலை தொடர்ந்து கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச தலைவர் பதவியை ஏற்று கட்சியை வழிப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன. அம்பாந்தோட்டையை சொந்த இடமாக கொன்ட சஜித் பிரேமதாச முன்னாள் ஐ.தே.கட்சி பிரதமர் பிரேமதாசவின் …
Read More »மைத்திரி மீது சீறிப் பாயும் ஸ்டாலின்
அதிபர் சிறிசேனா பாராளுமன்றை கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இதனால்,பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார். இருப்பினும், அவரது முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் ராஜபக்சே தோற்பது …
Read More »தொடர்ந்தும் ரணிலே!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது தொடர்பில் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் எது வித புதிய தீர்மானங்களும் எட்டப்படவில்லை. அதன் படி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்து ரணிலே செயற்படுவார்.
Read More »இன்றைய ராசிபலன் 10.11.2018
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சில …
Read More »யாழில் விலக மறுத்த இராணுவம்! விலக வைத்த கூட்டமைப்பு
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்களில் ஆயிரத்து 119 ஏக்கர் நிலம் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்கு தொடர்ந்தும் தேவைப்படும் அதே நேரம் 786 ஏக்கர் நிலம் விடுவிக்க கோரும பிரதேசத்தில் 216 ஏக்கரில் இராணுவத்தினரின் முக்கிய கட்டிடஙகள் உள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். ஜனாதிபதி தலமைநில் நேற்றைய தினம் இடம்பெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணி மகாநாட்டிலேயே படையினரால் மேற்படி விடயம் சுட்டிக் காட்டப்பட்டது. குறித்த கூட்டத்தில்ல கடத்த கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட …
Read More »பிளந்தது மஹிந்த-மைத்திரி அணிகள்? திடுக்கிடும் தகவல்
அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் மைத்திரி – மஹிந்த அணிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி கடந்த 26ஆம் திகதி ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. …
Read More »