Tuesday , October 14 2025
Home / ராசிபலன் / 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – விருச்சிகம்

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – விருச்சிகம்

இந்த குழந்தைகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருடைய குழந்தைகள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழில் சிறக்கும். புதிய பொறுப்புகளையும் ஏற்று நடத்துவீர்கள். பயங்கள் மறைந்து கவலைகளின்றி காணப்படுவர்.

எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிக்கும் திறன் இருக்கும். எதிராக நின்ற போட்டியாளர்கள் படுதோல்வி அடைவர். உடன்பிறந்தோர் அன்புடன் நடந்து கொள்வார்கள். துணிச்சலான காரியங்களிலும் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.

சமூகத்தில் நல்ல நிலைக்கு வருவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களும் உங்களது கருத்தறிந்து நடந்து கொள்வார்கள். உடலாரோக்கியம் சிறக்கும். உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள தேவையான உடற்பயிற்சிகளை செய்வீர்கள். சிறந்த பேச்சாளர் என்கிற நிலைக்கு உயர்வுண்டாகும். பணம் பல வழிகளில் வந்து சேரும். அரசிடமிருந்து ஆதாயங்களையும் சலுகைகளையும் பெறுவர். நோயினால் பீடிக்கப்பட்டிருந்தால் பாதிப்புகளிலிருந்து விடுபட்டு விடுவர். தீயவர்களின் சகவாசம் மறைந்து நல்லவர்களின் தொடர்பு தானாகவே தேடிவரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டுமே கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடல் சோர்வு, மனத்தெளிவின்மை அகலும். சக ஊழியர்கள் பகைமை மறந்து நட்பு பாராட்டுவர். திறமையை வளர்த்துக்கொள்வர்.

வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் நன்மைகளைக் காண்பர். போட்டிகளையும் சாதுர்யத்துடன் சமாளிப்பர். விற்பனை பிரதிநிதிகள் சிறப்பாக பணியாற்றுவர். அதிக லாபம் தரும் பொருள்களை வாங்கி விற்பனை செய்வார்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். சிறிய அளவில் வியாபாரத்தை விரிவுபடுத்த முனைவர்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். மனஉற்சாகத்துடன் கட்சி பிரசாரங்களில் பங்கேற்பீர்கள். வழக்குகளும் முடிவுக்கு வரும். மேலும் அதிகாரம் மிக்க பதவிகளும் உங்களைத் தேடி வரும். வெற்றி தரும்படியான பயணங்களை மேற்கொள்வர். தொண்டர்களும் உங்கள் மனமறிந்து நடந்து கொள்வர்.

கலைத்துறையினர் புதிய அங்கீகாரங்களைப் பெறுவர். புதிய வாய்ப்புகளும் வரும். திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக மாறும். பொருளாதார வசதிகள் மேம்படும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். புகழ் வளரும்.

பெண்மணிகளுக்கு அனைத்து காரியங்களும் சுமுகமாக முடிவடையும். குடும்பத்தாரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். கணவரிடம் நல்ல உறவு அமையும். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். புதிய ஆலயங்களுக்கு சென்று வருவர். பொருளாதாரம் நன்றாக இருக்கும். கடன் தொல்லைகள் ஏற்படாது.

மாணவமணிகள் கடினமாக உழைத்து கணிசமான மதிப்பெண்கள் பெறுவர். உடன்பிறந்தோரின் உதவிகளால் கல்வியில் முன்னேறுவர். பயிற்சியும் முயற்சியும் உங்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் நல்ல முறையில் பழகுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம். கோளறு பதிகம் பாராயணம் செய்யலாம். செவ்வாய்தோறும் எலுமிச்சைமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள். முன்னோர் வழிபாடு தினமும் செய்யவும். கிழக்கு, வடக்கு ஆகிய திசைகள் நன்மை தரும். செவ்வாய் – குரு – சுக்கிரன் ஹோரைகள் அனுகூலமாக இருக்கும்.

Check Also

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் …