Tuesday , October 14 2025
Home / ராசிபலன் / 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மீனம்

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மீனம்

இந்த மனதில் தோன்றும் எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்துவீர்கள். நெருக்கடியான சமயங்களில் மதிநுட்பத்தால் நிலைமைகளைச் சமாளித்து விடுவீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமென்றாலும் அவ்வப்போது சிறுசிறு நஷ்டங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். போட்டி, பந்தயம், ஸ்பெகுலேஷன் துறைகளில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அவர்களால் சில முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்கிற பழமொழிக்கு ஏற்ப நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து காரியமாற்றுவீர்கள். உங்கள் பேச்சுத் திறனால் மற்றவர்களைக் கவருவீர்கள். குழந்தைகள் வழியில் முன்னேற்றங்கள் உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறப்பாக அமையும். இந்த காலகட்டத்தில் காணாமல்போன பொருள்களும் திரும்பக் கிடைக்கும்.

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்களின் ஆன்மிக உணர்வு மிகுதியாகவே இருக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையில் இருந்த வெறுப்புகள் மறைந்து சிறப்பான பிடிப்புகள் உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலையில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். திட்டமிட்ட வேலைகளில் சில இடையூறுகள் தோன்றினாலும் விரைவில் அவை விலகி பதவி உயர்வு கிடைக்கும். பயணங்களால் பணவரவைக் காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்படும் இடையூறுகளை சாதுர்யமாக முறியடிப்பீர்கள். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாகவே முடிவடையும். போட்டிகளால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. பழைய எதிரிகளின் மீது ஒரு கண் இருக்கட்டும். பழைய கடன்கள் வசூலாகும். புதிய யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் புகழும் அந்தஸ்தும் உயரும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கட்சியில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவீர்கள். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பயணங்களால் நன்மைகளை அடைவீர்கள். செயல்கள் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும்.

பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்குவர். குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பர். கணவருடன் அன்போடு பழகுவர்.

மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்தவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பாடங்களைப் பிறகு படித்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல் உடனுக்குடன் மனப்பாடம் செய்யவும். விளையாட்டிலும் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு உதவவும். வியாழக்கிழமைதோறும் உங்களால் முடிந்த அளவு அருகம்புல்லை மாலையாகக் கட்டி விணாயகருக்கு சாத்தவும். முடிந்தவர்கள் தேங்காய் மாலை சாத்தலாம். மேற்கு, வடக்கு ஆகிய திசைகள் அனுகூலமாக இருக்கும். சந்திரன் – குரு – சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் எதை ஆரம்பித்தாலும் வெற்றிதான்.

Check Also

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் …