Sunday , August 24 2025
Home / ராசிபலன் / 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கன்னி

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கன்னி

இந்த ஆண்டு முடிவு கிடைக்காமல் தவித்த விஷயங்களுக்கு தானாகவே முடிவு கிடைத்துவிடும். சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். எதிரிகளுக்குச் சரியான பதிலடி கொடுப்பீர்கள். வழக்குகளிலும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களும் வசூலாகும். உடன்பிறந்தோருக்கு தக்க நேரத்தில் உதவிகள் செய்து அவர்களது நேசத்தைப் பெறுவீர்கள்.

அரசாங்கத்திலிருந்து நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். வாக்குவாதங்களில் சமர்த்தர் என்று பெயரெடுப்பீர்கள். உங்கள் பேச்சில் தத்துவக் கருத்துகள் மிகுந்திருக்கும். மனதிலிருந்த சஞ்சலங்களும் குழப்பங்களும் மறைவதுடன் குடும்பத்தில் சந்தோஷமும் நிறையும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகளும் கிட்டும். சிலருக்கு குலதெய்வ வழிபாடுகளும் கைகூடும். மேலும் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டிய காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்ப்புகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவுடன் பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.சிலர் வெளிநாட்டுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்புகளையும் பெறுவர்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாக முடியும். புதிய பொருள்களை விற்பனை செய்து மேலும் லாபத்தை அள்ளுவீர்கள். புதிய விற்பனை பிரதிநிதிகளை நியமிப்பீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள் விலகும். மேலும் போட்டியாளர்களின் மனமறிந்து சந்தையில் விலையை நிர்ணயித்து வியாபாரம் செய்ய நேரிடும். விவசாயிகளுக்கு உற்பத்தியில் நல்ல பலன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பெரிய சாதனைகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர். பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்களின் ரகசியத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். எதிரிகளின் பலம் குறையும். சிலருக்கு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வந்து விடுவிக்கப்படுவர். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தி அவர்களின் ஆதரவையும் தக்க வைத்துக் கொள்வீர்கள்.

கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ஒப்பந்தங்களில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். திறமைக்குத் தகுந்த அங்கீகாரத்தையும் பெறுவர். சக கலைஞர்களால் பாராட்டப்படுவார்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் அன்பு பாசத்தோடு பழகுவர். மனதில் உற்சாகத்தைக் கூட்டிக் கொண்டு செயல்படுவீர்கள். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் அன்பு பாசத்தோடு பழகுவதோடு, கடமைகளில் சலிப்பு உண்டானாலும் மனதில் உற்சாகத்தைக் கூட்டிக் கொண்டு செயல்படுவர். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவர்.

மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். பாடங்களை மனப்பாடம் செய்ய போதிய பயிற்சிகளையும் மேற்கொள்வர். தேவையான உடற்பயிற்சிகள் செய்து உடல்பலத்தைக் கூட்டிக்கொள்வதுடன் வருங்காலத் திட்டங்களுக்கு அஸ்திவாரமும் போடுவீர்கள்.

பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் தினசரி ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். “துளஸி”யை பெருமாளுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்களில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும். மேற்கு, தெற்கு ஆகிய திசைகள் அனுகூலம் தரும். புதன் குரு ஹோரைகள் நன்மையைத் தரும்

Check Also

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020

Today palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் …