Friday , April 19 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஓமந்தையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குங்கள்

ஓமந்தையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குங்கள்

போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குங்கள்

வடக்கு-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி குறித்த ஓமந்தையில் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு பிடித்துத் தரக்கோரி முன்னெடுக்கப் படவுள்ள  போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (27) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் வேண்டு கோள் விடுத்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து ஓமந்தையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

வடக்கு-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 5 மாவட்ட மக்கள் ஓமந்தையிலும் 3 மாவட்ட மக்கள் கல்முனையிலும் குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv