Wednesday , January 29 2020
Home / முக்கிய செய்திகள் / இன்றைய ராசிபலன் 15.08.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 15.08.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இன்றைய ராசிபலன் 15.08.2019

மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.

ரிஷபம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார் கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார் கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோ கத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்: இன்றும் சந்திராஷ் டமம் நீடிப்பதால் தன்னம் பிக்கை குறையும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர் கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத் தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர் கள். மனைவிவழி உறவினர் கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் முடியும் நாள்.

சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர் கள் உங்களை கலந்தாலோ சித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்க ளின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: குடும்பத்தினருடன் உங்களின் நேரத்தை செலவழிப்பீர்கள்.  உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகா ரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.

துலாம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள்.  புது வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதிதாக ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

மகரம்: இன்றும் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங் களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பேச்சில் இங்கிதம் தேவைப் படும் நாள்.

கும்பம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மீனம்: உங்களுடைய ஆலோச னைகள் எல்லோரும் ஏற்கும் படி இருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீரென்று அறிமுகமாகும் நபரால் பயனடைவீர்கள். பொது காரியங் களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.

Check Also

இன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்

இன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்! ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசா …

This function has been disabled for Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News.