Wednesday , January 29 2020
Home / முக்கிய செய்திகள் / இன்றைய ராசிபலன் 02.08.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 02.08.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மேஷம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரங்கள் மதிப்பார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக்கிடைக்கும்.

ரிஷபம்: சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக்கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மிதுனம்: கடினமான காரியங்களையும் சுலபமாக சாதீப்பீர் கள். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன  வாய்ப்புகள் தேடி வரும். உத்யோ கத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாகமான நாள்.

கடகம்: பகல் 12 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்ப தால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தா லும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.  வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும்.

சிம்மம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பகல் 12 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப் படும் நாள்.

கன்னி: எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை  அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.

துலாம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந் தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது நட்பு மலரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.  உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு கிட்டும். மதிப்பு, மரியாதை கூடும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.  உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.

தனுசு: பகல் 12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல் லாம் சரியாக பயன்படுத்தா மல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள்.  வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

மகரம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பணவரவு திருப்திதரும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். பகல் 12 மணி முதல் சந்திராஷ்டமம்  தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள்  உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர் களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

இன்றைய ராசிபலன் 02.08.2019

Check Also

இன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்

இன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்! ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசா …

This function has been disabled for Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News.