Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு !

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு !

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு !

ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலையாக செயற்பட வாய்ப்புள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில மாதங்களில், அவர்கள் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களில் அவர்கள் UNP யுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும் யுத்தம் முடிவடைந்த பின் கடந்த 10 வருடங்களுக்குள் ராஜபக்ஷ ஆட்சி 5 வருடங்கள் , ஐக்கிய தேசிய கட்சி அரசினுள் 5 வருடங்கள் என தமிழ் மக்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் , தொடர்ச்சியாக இந்த தீய சுழற்சியை தமிழ் மக்கள் தொடர அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் இதற்காக அழுத்தம் கொடுக்கின்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய குறைந்த பட்சம் தங்கள் கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தவும் அல்லது இந்த கோரிக்கைகளை நாட்டில் வைத்திருக்கவும் அவர்கள் ஒரு அமைதியான கொள்கையை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

எனினும் எதிர்காலத்தில் இது மாறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv