Friday , March 29 2024
Home / Tag Archives: india news world (page 10)

Tag Archives: india news world

37.500 கோடி ரூபாவை கடனாக பெற தீர்மானம்: முயற்சிக்கின்றது அரசாங்கம்

37.500 கோடி ரூபாவை இந்திரஜித் குமாரசுவாமி

37.500 கோடி ரூபாவை கடனாக பெற தீர்மானம்: முயற்சிக்கின்றது அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் நிலவும் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இவ்வாண்டில் 37,500 கோடி ரூபாவை (2.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) திரட்டுவதற்கு​ ​ஸ்ரீலங்காஅரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். ஒன்றிற்கு மேற்பட்ட பல்வேறு மூலங்களில் இருந்து திரட்டப்படுகின்ற கடன்கள் மற்றும் அரச பிணையங்கள் மூலமாகவே இந்தத் தொகையை திரட்ட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய வங்கியின் …

Read More »

காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி: போராட்டம் தொடருமென மக்கள் எச்சரிக்கை

அரசாங்கம் வாக்குறுதி

காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி: போராட்டம் தொடருமென மக்கள் எச்சரிக்கை அரச காணிகளை இராணுவத்தின் செயற்பாட்டிற்கு பெற்றுக்கொண்டு பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு பரிசீலனை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலாகத்திற்கு முன்னால் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களில் சிலர் இன்றையதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்த சந்திப்பின்போதே விரைவில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் …

Read More »

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை: 5 பொலிஸாரும் விளக்கமறியலில்

யாழ். பல்கலை மாணவர்கள்

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை: 5 பொலிஸாரும் விளக்கமறியலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த ஒக்டோபர் …

Read More »

கேப்பாப்பிலவு மக்களிடம் காணிகளை ஒப்படைக்கவும்: இராணுவம் ஜனாதிபதியின் உத்தரவை மீறியுள்ளது

கேப்பாப்பிலவு மக்களிடம் காணிகளை

கேப்பாப்பிலவு மக்களிடம் காணிகளை ஒப்படைக்கவும்: இராணுவம் ஜனாதிபதியின் உத்தரவை மீறியுள்ளது “காணிகள் மீளக் கையளிப்பு தொடர்பில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை பாதுகாப்புப் படையினர் மீறியுள்ளனர். எனவே, கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க அரசு உடன் நடவடிக்கை வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை …

Read More »

அதிமுக எம்.எல்.ஏக்கள் சுதந்திரமான சட்டசபை வாக்கெடுப்பு நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

அதிமுக எம்.எல்.ஏக்கள்

அதிமுக எம்.எல்.ஏக்கள் சுதந்திரமான சட்டசபை வாக்கெடுப்பு நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல் அதிமுக எம்.எல்.ஏக்கள் பிணைக் கைதிகளாக உள்ளதால் சுதந்திரமான சட்டசபை வாக்கெடுப்பு நடத்த ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதால் சட்டசபையில் சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் அரசியல் சூழல் …

Read More »

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல் சென்னை வர உள்ளதாக தகவல்

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல் சென்னை வர உள்ளதாக தகவல் மும்பையில் உள்ள தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல் சென்னை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை வரும் ஆளுநர் வித்யாசகர் ராவை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா தமது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சென்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். அதேபோல் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தமது ராஜினாமா …

Read More »

பாலமேட்டில் 2 ஆண்டுகளுக்கு பின் ஜல்லிக்கட்டு தொடங்கியது – சீறிப் பாயும் காளைகளை பிடிக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள்

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு

பாலமேட்டில் 2 ஆண்டுகளுக்கு பின் ஜல்லிக்கட்டு தொடங்கியது – சீறிப் பாயும் காளைகளை பிடிக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. சீறிப் பாயும் காளைகளை பிடிக்க 1607 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா 2 ஆண்டுகளுக்கு பின்னர், 850 காளைகளுடன் 1607 மாடுபிடி வீரர்களுடனும் இன்று தொடங்கியது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் …

Read More »

அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்தரப்புக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அனைவரும் ரகசிய இடத்தில் தங்கவைப்பு

அதிமுக எம்எல்ஏக்கள்

அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்தரப்புக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அனைவரும் ரகசிய இடத்தில் தங்கவைப்பு எதிர்தரப்புக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் முதல்வராக பொறுப்பேற்க தயாராகி வருகிறார். இதற்கிடையே, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அளித்த திடீர் பேட்டியால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள் …

Read More »

மகள் இவான்கா நவநாகரீக ஆடை தயாரிப்பை விற்பனை நிறுத்திய நிறுவனம் மீது டிரம்ப் விமர்சனம்

இவான்கா நவநாகரீக ஆடை

மகள் இவான்கா நவநாகரீக ஆடை தயாரிப்பை விற்பனை நிறுத்திய நிறுவனம் மீது டிரம்ப் விமர்சனம் தனது மகள் இவான்கா உரிமையாயாளராக உள்ள ஒரு நவநாகரீக ஆடை தயாரிப்பை தங்களின் விற்பனையிலிருந்து நிறுத்திய ஒரு ஆடை விற்பனையாளர் மீது தாக்குதல் தொடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு ஜனநாயக கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘மிகவும் ‘நியாயமற்ற முறையில் இவான்கா நடத்தப்பட்டுள்ளார்” என்று சில்லரை ஆடை விற்பனையாளரான நார்ட்ஸ்ட்ரம் …

Read More »

வடக்கு மாகாண மீனவ அபிவிருத்தி திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தீர்மானம்

வடக்கு மாகாண மீனவ அபிவிருத்தி

வடக்கு மாகாண மீனவ அபிவிருத்தி திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தீர்மானம் வடக்கு மாகாண நிலையான மீனவ அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து முற்பண கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்- ”வட. மாகாண நிலையான மீனவ அபிவிருத்தி …

Read More »