Tag: ஐக்கிய தேசியக் கட்சி

மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி பதவி விலக போகிறாரா?

ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங் அவர்களுக்கு சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் மைத்திரி சில நாட்களுக்கு முன் ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்றால் நான் ஒரு மணி நேரத்திலே பதவி ராஜினாமா செய்வேன் என மைத்திரி அதிரடியாக அறிவித்திருந்தார். ஆனால் இப்போது ரணில் பதவி பிரமாணம் இவர் முன்னிலையிலே நிறைவேறியுள்ளது ஆனால் அவர் எந்தவித […]

ரணிலுக்கு ஆதரவு கோரி இன்று சபையில் வாக்கெடுப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இன்று (12) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்தப் பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, அகில விராஜ்காரியவசம், லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, பளனி திகாம்பரம், மங்கள சமரவீர, ரிஷாட் பத்தியுத்தீன் ஆகியோரினல் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை குறித்து கட்சித் […]

சபாநாயகர் மீது கடும் ஆவேசத்தில் விமல்

ஐக்கிய தேசியக் கட்சியினருக்குப் பக்கச்சார்பாக செயற்படுகின்ற சபாநாயகரை நாம் இனியொரு போதும் சபாநாயகராக அங்கீகரிக்கப் போவதில்லை. ஆகையினாலேயே இன்று அக்கிராசனத்தில் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே என்று சபாநாயகரை விளித்தேன். இவ்வாறு பக்கச்சார்பாக செயற்படும் சபாநாயகரின் ஊடாக நாட்டின் அரசியல் குழப்பநிலைக்குத் தீர்வுகாண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடிய நிலையில் அமர்வுகளைப் புறக்கணித்து மஹிந்த தரப்பினர் வெளிநடப்புச் செய்திருந்தனர். இதையடுத்து […]

மைத்திரிக்கு ரணில் விடுத்துள்ள அதிரடி சவால்

பாராளுமன்றத்தில் எந்தநேரத்திலும் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருகின்றோம். ஆனால் மஹிந்த மைத்திரி அணியினர் நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றனர். எமது மக்கள் பலத்தை காட்ட பாராளுமன்ற தேர்தல் அல்ல ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெற்றியை உறுதிப்படுத்வோம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணி தற்போது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் மக்கள் பேரணி ஒன்றை நடத்திவருகின்றது. இதில் […]

மெழுகுவர்த்தி போராட்டத்துக்கு தயாராகும் ஐ.தே.க

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு கங்காராம விகாரைக்கு அருகில் இந்த மெழுகுவர்த்திப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நேற்றைய தினம் சிலாபம் முன்னேஷ்வரம் கோவிலில் ​தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டதாகத் […]

Ranil

ரணில் திடீர் பதவி விலகல் ?

நாட்டில் ஏற்பட்டிருக்கும் திடீர் அரசியல் மாற்றத்தை தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை ரணில் விக்கிரமசிங்க ராஜனாமா செய்ய உத்தேசித்துள்ளதாக கொழும்பு ஐ.தே.கட்சி உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணிலின் பதவி விலகலை தொடர்ந்து கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச தலைவர் பதவியை ஏற்று கட்சியை வழிப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன. அம்பாந்தோட்டையை சொந்த இடமாக கொன்ட சஜித் பிரேமதாச முன்னாள் ஐ.தே.கட்சி பிரதமர் பிரேமதாசவின் […]

மகிந்தவிற்கு

மஹிந்த குறித்து ரணிலின் மிக முக்கிய செய்தி

எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஸவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் வழங்கியுள்ள செவ்வியில், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவருக்கே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதாவது 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைய பிரதமர் ஒருவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு […]

சஜித் தொடர்பில் விஜயகலா

இலங்கையை விட்டு வெளியேறும் விஜயகலா?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பரப்புரைச் செயலாளர் துசார திசநாயக்க இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “அண்மையில் விடுதலைப் புலிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், அவருக்கு எதிராக விரைவில் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் […]

ஐ.தே.க. எம்.பிக்களுக்கு வெளிநாடு செல்லத் தடை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் தினத்தன்று ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள அனைத்து எம்.பிக்களும் சபையில் பிரசன்னமாகவேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்இ ஏப்ரல் முதல் வாரத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும்இ மருத்துவ தேவைகளுக்காக செல்வோர் முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் பிரதமர் உட்பட ஐ.தே.கவிலுள்ள மூத்த அமைச்சர்களால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீது […]

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கிடையே முறுகல்

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கிடையே முறுகல்நிலை உருவாகியுள்ளதாக உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம், ஒழுங்கு அமைச்சை எவரிடம் கையளிப்பது என்பது தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்தே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று கடந்தவாரம் இடம்பெற்றது.அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசீம், அகிலவிராஜ் காரியவசம், ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இதில் பங்கேற்றனர். சந்திப்பில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “”சட்டம், ஒழுங்கு […]