Tag: ஐ.தே.க.

ஐ.தே.க.யிலிருந்து 20 பேர் கட்சி தாவுவது உறுதி

மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்கி அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 20 பேர் விரைவில் இணைந்து கொள்ளவுள்ளதாக வனப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆனந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். தாம் தற்பொழுது அந்த 20 பேருடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் மிகவும் பொறுப்புடன் இந்தக் கருத்தைக் கூறுகின்றேன். தற்பொழுதும் தனது வாகனத்தில் […]

மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகின்றோம் ; ஐ.தே.க.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நாம் தலைவணங்குகின்றோம். மக்கள் எமக்கு வழங்கிய எச்சரிக்கையாகவே தேர்தல் முடிவினை கருதுகின்றோம். இது தொடர்பில் ஆழ்ந்து சிந்தித்து எமது செயற்பாடுகளை சரியான முறையிலும் வேகமாகவும் முன்னெடுக்க நாம் பாடுபடுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டில் சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கு மக்கள் எமக்கு பொறுப்பு வழங்கினர். அதே […]

புதிய வெளிவிவகார அமைச்சர் யார்? ஐ.தே.க., சு.க இடையே வாக்குவாதம்

புதிய வெளிவிவகார அமைச்சர் குறித்து அரசுக்கு கடும் வாக்குவாதம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சராக இருந்து ரவி கருணாநாயக்க நேற்று தனது பதவியை இராஜனாமா செய்ததையடுத்து குறித்த அமைச்சு பதவியை வெற்றிடமாகியுள்ளது. யாருக்கு அந்த பதவியை வழங்குவது என்று பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றும் அரசால் இறுதி முடிவொன்றை எடுக்க முடியாதுள்ளது. திலக் மாரப்பன தற்காலி வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாளும் தற்போது அந்த நிலைப்பாடு கைவிடப்படுள்ளது. முன்னதாக அமைச்சர்களான […]

புதிய அரசமைப்பு மிகவும் அவசியம்! – சிங்கள மக்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்கிறது ஐ.தே.க.

புதிய அரசமைப்பு நாட்டுக்கு மிகவும் அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார். “பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கும் நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு தயாரிக்கப்படமாட்டாது. சிங்கள மக்களைப் பாதுகாக்கும் வகையில்தான் அரசமைப்பு தயாரிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “இன்னும் புதிய அரசமைப்பு தயாரிக்கப்படவில்லை. அதில் அடங்கப்போகின்ற விடயங்கள் பற்றி எதுவும் தெரியாமல் பொய்யான […]