ஐ.தே.கவின் அடுத்தக்கட்ட நகர்வு தொடர்பில் அறிவிப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளை, கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். அந்தவகையில், 1. ஐக்கிய தேசிய முன்னணியின் அமைப்பாளர் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2.கட்சியின் சம்மேளனம், ஒக்டோபர் 3 ஆம் திகதியன்று, கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில், காலை 10 மணிக்கு நடைபெறும். கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச […]
Tag: ஐ.தே.க.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என பகிரங்கமாக மேடையில் தெரிவித்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச. நேற்று யாழ்ப்பாணத்தில் இதனை தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பொக்கணையில் நேற்று வீட்டுத் திட்டம் திறந்து வைத்த பின்னர், பயனாளிகளிற்கு உதவிப்பொருட்கள் வழங்கினார். இதன்போதே மேற்படி கருத்தை தெரிவித்தார். அமைச்சர் சஜித் உதவிப்பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, விஜயகலா […]
ஐ.தே.கவின் வேட்பாளர் முடிவானது? ரணில்
ஐ.தே.கவின் வேட்பாளர் முடிவானது? ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்தார். கண்டிக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் கூறினார். கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் அடுத்தவாரம் வேட்பாளர் நியமனம் இடம்பெறும் என்றும் அதனை கட்சியின் மூத்த உறுப்பினரான சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதிப்படுத்துவார் எனவும் அவர் கூறினார். ஐ.தே.கவின் வேட்பாளராக […]
திருட்டு வழியில் சஜித்தை ஜனாதிபதியாக்க மாட்டோம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை திருட்டுத்தனமான முறையில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ மாற்ற மாட்டோம் என இராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். நேற்று (23) மாலை மாத்தறையில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். பொதுமக்களின் பலத்தினுாடாக சரியான முறையான வழிமுறையில் ஆட்சி பீடம் ஏற்றுவோம் எனவும் அவர் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் […]
படுகொலைகளைப் புரிந்த கோட்டாவை உலாவவிட்டது ஐ.தே.க. வின் தவறு!
மனிதப் படுகொலைகளைப் புரிந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமல் வெளியில் உலாவவிட்டது ஐக்கிய தேசியக் கட்சி அரசு செய்த பாரிய தவறென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கி வென்றால் இந்நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கி வென்றதும் பயங்கரவாதிகளைக் கூண்டோடு […]
ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் ஐ.தே.க!
தேசிய அரசாங்கத்தை உருவாக்கி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லையென்றால் ஐ.தே.க உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் வெளியாகும் சிங்கள வார பத்திரிக்கையொன்றே மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய அரசாங்கம் அமைக்கும் விடயத்தில் ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்வதன் ஊடாக அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐ.தே.க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அப்பத்திரிக்கை செய்தி […]
ரணில் தலைமையில் ஐ.தே.க அவசர கூட்டம்
ஐ.தே.க கட்சியின் கட்சி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சிறிகொத்தலாவையிலுள்ள ஐ.தே.க. தலைமை காரியாலயத்தில் பிரதமர் ரணில் விக்கரம சிங்க தலைமையில் கூட்டம் கூடவுள்ளது. தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க ஆலோசனை ஒன்று சபையில் முன்வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி- ஐ.தே.க.வுக்கு இடையில் மீண்டும் சந்திப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது நாடடின் அரசியல் நிலைமையை சீராக கொண்டுவர வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பிரதமர் தொடர்பிலும் ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் சந்திப்பினை மேற்கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் இதில் […]
மெழுகுவர்த்தி போராட்டத்துக்கு தயாராகும் ஐ.தே.க
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு கங்காராம விகாரைக்கு அருகில் இந்த மெழுகுவர்த்திப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நேற்றைய தினம் சிலாபம் முன்னேஷ்வரம் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டதாகத் […]
கொழும்பில் தீவிர பாதுகாப்புடன் மகிந்த ஆதரவு பேரணி
அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று கொழும்பில் இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து வெவ்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகள் ஆரம்பிக்கப்பட்டு, பத்தரமுல்லை நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதிக்குச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருமளவானவர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படும் நிலையில், நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் சுமார் 1500 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அத்தோடு, முக்கிய பிரதேசங்களில் விசேட […]




