Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சஜித் கூட்டமைப்பிற்கும் இடையில் முரண்பாடு!

சஜித் கூட்டமைப்பிற்கும் இடையில் முரண்பாடு!

சஜித் கூட்டமைப்பிற்கும் இடையில் முரண்பாடு!

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை தொடர்ப்பில் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களால் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் 85% வாக்குகளைப் பெற்ற பின்னரும், பாரபட்சமின்றி நீதியை மட்டுமே எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாட்டை சஜித் பிரேமதாச பாராட்டவில்லை என்பது ஏமாற்றமளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட பயண தடை தொடர்பாக கருத்து பதிவிட்டிருந்த சஜித் பிரேமதாச,

“இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத் தடை விதிக்கப்படுவது வருந்தத்தக்கது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தேசிய முயற்சியை முன்னெடுத்தவர்களில் இவரும் ஒருவர்” என சஜித் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவிற்கு வெளிப்படையான ஆதரவை வழங்கியிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக புதிய கூட்டணிக்கு சஜித் பிரேமதாச தலைமை தாங்கவுள்ள நிலையில் தற்போது இராணுவ தளபதி விவகாரம் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஒரு முரண்பாட்டை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …