Monday , February 24 2020
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!

இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற 14 ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் கலந்துக்கொணண்டதன் பின்னர் தமிழக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளளார்.

இந்த மாநாட்டில் முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக முன்னாள் அமைச்சர் நல்லுசாமி உள்ளிட்ட பல வெளிநாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பின்னர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா, இலங்கை தமிழர் பிரச்சனைக்கு பிரதமர் மோடி சுமூக தீர்வு காண்பார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமை தமிழர்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

Check Also

, வைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் - சிசுயும்!

வைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் – சிசுயும்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! வைத்தியசாலை அதிகாரிகளின் கவனகுறைவால் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாயும் – சிசுயும்! மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திற்கு …

This function has been disabled for Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News.