Tuesday , April 16 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம்

மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம்

மைத்திரி – ரணில் ஒன்றாக யாழ் விஜயம்

யாழ்ப்­பா­ணத்தில் நாளை சனிக்­கி­ழமை நடை­பெறும் பொது நிகழ்­வு­களில் பங்­கு­பற்­று­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அங்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர்.

‘எண்­டர்­பிறைஸ் ஸ்ரீலங்கா’ கண்­காட்­சியின் மூன்­றா­வது தேசிய நிகழ்வு நாளை 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்­பாணம் முற்­ற­வெ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது.

நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மையில் நடை­பெறும் இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் பங்­கு­பற்­று­கின்­றனர்.

இந்த நிகழ்வின் ஆரம்பப் பணி­க­ளுக்கு மட்டும் 6 கோடி ரூபா நிதி செல­வி­டப்­பட்­டுள்­ளது எனக் கூறப்­பட்­டது.

இதே­வேளை, யாழ். மாந­கர சபையின் புதிய மாந­கரக் கட்­ட­டத்­துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க,அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். ஜனாதிபதியும் இந்த நிகழ்வில் பங்குபற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tamil News

 

 

 

 

Technology News

 

 

 

 

World Newspapers

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv