Friday , February 21 2020
Home / சினிமா செய்திகள் / லொஸ்லியா தந்தை மரியநேசன் தொடர்பில் வெளியான பகீர் குற்றச்சாட்டு!

லொஸ்லியா தந்தை மரியநேசன் தொடர்பில் வெளியான பகீர் குற்றச்சாட்டு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
லொஸ்லியா தந்தை மரியநேசன் தொடர்பில் வெளியான பகீர் குற்றச்சாட்டு!

அந்தாள் ஒரு தேப்பனா என்ற ஆராய்ச்சிக்கு முதல், பிக்பாஸ் நிகழ்ச்சிபற்றி எழுதும் அநேகர், ‘இதை நான் விரும்பிப் பார்ப்பதில்லை’ ‘எதேச்சையாக இன்று பார்த்தேன்’ ‘நண்பர்கள் நச்சரித்ததால் பார்த்தேன்’ என்றெல்லாம் ‘முன்னுரை’ ஒன்றை வாசித்துவிட்டே எழுதுகிறார்கள்.

அதாவது ’எங்களுக்கு பார்க்கவே விருப்பம் இல்லை. ஏதோ வில்லங்கத்துக்குப் பார்க்கிறோம்’ என்பதுபோல இருக்கிறது அவர்களின் பேச்சு.

எனக்குப் புரியவே இல்லை. பிக்பாஸ் என்பது தடைசெய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியா? அல்லது அதைப்பார்த்தால் ஏதும் டெங்கு மலேரியா வந்துவிடுமா? அதைப் பார்க்கிறோம் என்று வெளியே சொல்வதில் என்ன வெட்கம்..???

நான் நாள் தவறாமல் பிக்பாஸ் பார்ப்பேன். அதுவும் நல்லா நீட்டி நிமிர்ந்து, காலுக்கு மேல காலப்போட்டு ‘ஹாயா’ இருந்துதான் நிகழ்ச்சியைப் பார்ப்பேன்.

சில நாட்களில் சாமம் 2 மணிக்கு வேலைமுடிந்து வரும்போது, கார் ஓடிக்கொண்டே பார்த்துக்கொண்டு வருவேன். யாராவது பொலீஸ்காரர் பார்த்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும். But I don’t care.

மற்றது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஏதும் இலக்கிய வாசம் இருக்கா? இது காலத்தால் நின்று நிலைக்குமா? என்றெல்லாம் ‘மோட்டு’ ஆராய்ச்சி செய்வதில்லை. இலக்கியம் பருக வேறு நிகழ்ச்சிகள் உள்ளன.

மொத்தத்தில் பிக்பாஸ் பார்ப்பதில் எந்த வெட்க துக்கமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொண்டு,

மகள் குறித்து கொஞ்சம் கூட புரிந்துணர்வு இல்லாத மடச்சாம்பிராணியாக இருக்கும் மரியநேசன் பற்றிப் பார்ப்போம்.

இவர் இப்படிக் கொந்தளிக்கும் அளவுக்கு லொஸ்லியா எந்த தப்பும் செய்யவில்லை. கவினுக்கும் லொஸ்லியாவுக்கும் ஒருவர்மீது ஒருவர் காதல் இருக்கிறதுதான்.

ஆனால் ‘அதை வெளியில் வந்து பார்த்துக்கொள்ளலாம்’ என்று தெளிவாகவே சொல்லிவிட்டார் லொஸ்லியா.

மற்றும்படி அதிக நேரம் கவினுடன் கதைப்பதும் சாண்டி குரூப்புடன் சேர்ந்து திரிவதும் ஒரு குற்றமே அல்ல. ஒரு பெண்ணுக்கு தனக்கான ‘லிமிட்’ தெரியும். அதுவும் லொஸ்லியா போன்ற ஊடகத் துறை பெண்களுக்கு இன்னும் நன்றாகவே தெரியும். மேலும் லொஸ்லியாவின் பேச்சிலும் செயலிலும் எப்போதும் ஒரு ‘Cut and right’ இருக்கும்.

ஒரு பெண் நான்கு ஆண்களுடன் நட்புடன் பழகினால் உடனே நமது சிந்தனை எல்லாம் ‘பெட் ரூமில்’ தான் போய் நிற்கும். தனக்கான எல்லையையும் கட்டுப்பாட்டையும் நன்கு அறிந்த பெண்கள் எவருடன் வேண்டுமானாலும் சகஜமாகப் பழகுவார்கள். அவர்களைப் பாதுகாக்க அவர்களுக்குத் தெரியும்.

ஒரு பெண் ‘கலகலப்பாக’ பழகுகிறாள் என்பதற்காக அவள் ‘எதற்கும்’ சம்மதிப்பாள் என்ற நினைப்புடன் கண்ட இடத்தில் கை வைத்து செருப்படி வாங்கிய ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இங்கே லொஸ்லியாவுடன் நெருக்கமாக இருக்கும் கவின்கூட டீசெண்டாகவே நடந்து கொள்கிறார். இதுவே அவர் தப்பான எண்ணத்துடன் லொஸ்லியாமீது கை வைப்பாராக இருந்தால் அவரது கன்னம் எப்படி மின்னும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

இதெல்லாம் பேஸ்புக்கிலும் ருவிட்டரிலும் எழுதும் அரைகுறைகள் மற்றும் அக்கா தங்கையுடன் கூடப் பிறக்காத ‘வென்றுகளுக்கு’த் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பெத்த தேப்பன் உனக்குமா தெரியேல..???

இப்ப என்ன பெரிய மானம் மண்ணாங்கட்டி போய்ச்சு எண்டு இந்த புலம்பல்? அப்பா வருகிறார் என்பதை அறிந்தவுடன் தன்னையும் மீறி கதறிய ஒரு மகளின் பாசத்தைக் கூட நக்கல் நையாண்டி செய்யும் சைக்கோக்கள் நிறைந்த இந்த சமூக வலைத்தளங்களின் பிடியில் இருந்து உனது மகளை நீ காப்பாற்றி இருக்கணுமா? இல்லையா?

‘உலகம் ஆயிரம் சொல்லட்டும். எனக்கு உன்னைப் பற்றித் தெரியும் மகளே’ என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அந்த வார்த்தைக்காகவே ஒரு மாதம் அழுதிருப்பார் லொஸ்லியா. அப்படி ஒரு ‘மோரல் சப்போர்ட்’ ஐ ஒரு அப்பாவாக குடுத்திருக்கணுமா? இல்லையா?

உந்தாள் உக்காந்து இருந்து விஜய் டிவியின் பேஸ்புக் பக்கத்தில் வரும் கொமெண்டுகளை வாசிக்கிறது போல. அப்ப உந்தாளுக்கு பேஸ்புக் பற்றியும் ஒண்டும் தெரியாது. அதுதான் விஷயம்.

சரி உனக்கு மானம் மண்ணாங்கட்டி போனால், முதலில் மகளைக் கட்டி அணைத்து அழுதுவிட்டு மற்றவர்கள் அனைவருடனும் ஒரு சம்பிரதாயத்துக்குப் பேசிவிட்டு, மகளை தனியே அழைத்துச் சென்று அட்வைஸ் செய்திருக்கலாமே? அது என்ன வீட்டுக்குள் வரும்போதே அலவாங்கை முழுங்கினமாதிரி வாறது…???

இண்டைக்கு அத்தனை பேர் முன்னிலையிலும் மானத்தை வாங்கியது நீங்கள்தான் மிஸ்டர் மரிய ( நேசம் இல்லாதவன் )

கடந்தவாரம் முழுவதும் கொடுத்த டாஸ்க்கை சிறப்பாகச் செய்து, இந்தவாரம் வீட்டின் தலைவியாக இருக்கும் மகளுக்கு ஒரு தேப்பன் குடுத்த பரிசு இது. என்னமோ போங்க…

குறிப்பு : பெண்களைப் புரிந்து கொள்வதில் எமது சமூகம் அதே 100 வருடங்கள் பின்னுக்குத்தான் நிற்குது. ஒண்டுமே செய்யேலாது என ரஜீவன் ராமலிங்கம் தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தம்

தற்காலிகமாக நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! தற்காலிகமாக நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தம் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்காக நாடாளுமன்ற அமர்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற …

This function has been disabled for Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News.