Friday , March 29 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / இந்தோனேசியாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் டி.வி.நிலையத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர்

இந்தோனேசியாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் டி.வி.நிலையத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர்

இந்தோனேசியாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் டி.வி.நிலையத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பாண்டங் நகரம் உள்ளது. இங்கு அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு பூங்காவில் இன்று திடீரென குக்கர் குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இந்த நிலையில் திடீரென மர்மநபர்கள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் அங்கிருந்த அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து அவற்றை கைப்பற்றினர். உள்ளே இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மர்ம நபர்களை சுற்றி வளைத்தனர்.

போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். வெடி குண்டுகளும் வீசப்பட்டது. பதிலுக்கு போலீசாரும் சுட்டதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இதற்கிடையே அரசு அலுவலகங்களுக்கு தீ வைத்தனர். உள்ளே புகுந்த மர்மநபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த போலீசார் தீவிரமாக முயன்றனர்.

அதற்குள் டி.வி. நிலையத்தை மர்மநபர்கள் கைப்பற்றினர். இதற்கிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தாக்குதலில் ஈடுபட்டது தீவிரவாத கும்பல் என தெரிய வந்துள்ளது.

ஆனால் இதற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி தோல்வி அடைந்து வருகின்றனர். எனவே இத்தாக்குதலில் அவர்களே ஈடுபட்டிருக்க கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …