Friday , March 29 2024
Home / முக்கிய செய்திகள் / சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்க வலியுறுத்தல்

சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்க வலியுறுத்தல்

யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஐ.நா. கூட்டத்தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த 17 வயதுடைய சுந்தரராஜன் ப்ரெட்ரிக் என்ற ஈழத்து இளைஞன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

நீதியை நிலைநாட்டுவதற்கான உறுதிப்பாடு இலங்கை அரசாங்கத்திடம் இல்லையென குறிப்பிட்ட குறித்த இளைஞன், கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் பிரகாரம் பொறுப்புக்கூறலுக்கான கடமைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளார்.

மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 8 வருடங்கள் கழிந்துள்ள போதும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு இன்றும் தீர்வு காணப்படாமல், அவர்களுடைய உறவினர்கள் இன்னும் போராடி வருகின்றனர் என சுட்டிக்காட்டிய குறித்த இளைஞன், இதுகுறித்து பொலிஸ், மனித உரிமைகள் ஆணைக்குழு முதலானவற்றில் முறைப்பாடுகளை பதிவுசெய்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களுக்கு எதிராக துன்புறுத்தல்கள் யுத்தத்திற்கு பின்னரும் தொடர்கின்றதென சுட்டிக்காட்டிய குறித்த இளைஞன், சர்வதேச விசாரணை பொறிமுறை மாத்திரமே நீதியை பெற்றுக்கொடுக்கும் என்றும் அதற்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv