Thursday , January 16 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / முதன்முறையாக 80 ஆயிரம் ரூபாவை எட்டிய தங்கத்தின் விலை!

முதன்முறையாக 80 ஆயிரம் ரூபாவை எட்டிய தங்கத்தின் விலை!

முதன்முறையாக 80 ஆயிரம் ரூபாவை எட்டிய தங்கத்தின் விலை!

சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலையை பொருத்து இலங்கையில் தங்கத்தின் விலை மாற்றத்துக்கு உள்ளாகிறது.

இந்நிலையில் ஜனவரி மாதம் முழுவதும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ள நிலையில், பெப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை கனிசமான அளவு அதிகரிப்பதும் அடுத்த நாள் சிறியளவில் விழ்ச்சியை காட்டுவதுமாக  நீடித்தது வந்துள்ளது.

இந்நிலையில் இன்று(22.02.2020) தங்கத்தின் விலை ஆயிரத்து 100 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து நேற்றைய தினம்(21.02.2020) 72 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கம் (22 கரட்) இன்று பவுன் ஒன்றுக்கு 73 ஆயிரத்து 600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, நேற்றைய தினம் 79 ஆயிரத்து 200 ரூபாயாகக் காணப்பட்ட தூய தங்கத்தின் விலை ( 24 கரட்) இன்று பவுன் ஒன்றுக்கு 80 ஆயிரத்து 300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

உலக சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால் அதன் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv