Friday , April 19 2024
Home / முக்கிய செய்திகள் / தேசிய சொத்துகளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கியதே சாதனை : கோட்டா

தேசிய சொத்துகளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கியதே சாதனை : கோட்டா

இலங்கையின் தேசிய சொத்துக்களை சீனாவிற்கும், இந்தியாவிற்கும் வழங்கியதன் மூலம் அவ்விரு நாடுகளினதும் அதிகாரப் போராட்டத்திற்கு நல்லாட்சி அரசே அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

குளியாபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போNது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”போலியான காரணங்களை சுட்டிக்காட்டி அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்தல விமான நிலையம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.

நல்லாட்சி அரசு இரண்டு ஆண்டுகளுக்கான அனைத்துத் திட்டங்களையும் நிறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து போலிய கடன் பொறியினை உருவாக்கிய அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. இதனைக் கண்டு பதற்றமடைந்த இந்தியாவை சமாளிப்பதற்காக அவர்களுக்கு மத்தல விமான நிலையத்தை வழங்கியுள்ளது.

எனவே, எதிர்காலத்தில் நாட்டின் ஆட்சியை பொறுப்பேற்கவுள்ள அரசோ அல்லது அரச தலைவரோ இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகண்டு நாட்டை மீட்க வேண்டும்.

இதேவேளை, நாட்டை அபிவிருத்தி செய்யவும், மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகளை நாம் கைப்பற்ற வேண்டும். எமது இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்த வேண்டும். அதற்காக நமது கல்வி கொள்கையை மாற்ற வேண்டும்” என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv