Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வெளிநாட்டு நீதிபதிகள், கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை :  செய்ட அல் ஹுசைன்

வெளிநாட்டு நீதிபதிகள், கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை :  செய்ட அல் ஹுசைன்

வெளிநாட்டு நீதிபதிகள், கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை :  செய்ட அல் ஹுசைன்

வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய, கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

இலங்கைத் தொடர்பிலான மனிதவுரிமைகள் பேரவையின் நிலைப்பாட்டை நேற்று அவர் அறிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.

மனித உரிமை ஆணையாளர் 30/1 தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றிய தமது அறிக்கையை சமர்ப்பித்து ஆணையாளர் உரையாற்றியிருந்தார்.

வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுணர்களை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு பங்களிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம், வடக்கு, கிழக்கில் காணிகள் விடுவிப்பு, பாதுகாப்புப் படையினர் தண்டனையில் இருந்து தப்பிக்கும் கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்படல் உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இலங்கை அரசு ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய, கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, போர்க்குற்ற விசாரணை தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

பாதிக்கப்பட்ட மக்களிடம் அதிகரித்து வரும் அமைதியின்மை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை களையும் வகையில், இலங்கை அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான வகையில் இணைந்து செயற்பட முடியும் என்று மனித உரிமை பேரவை நம்புகிறது.

கடந்தகாலத்தை விட வேறுபட்டதொரு எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கை அடிப்படை ஒழுங்கில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் நீதி நிலைநாட்டப்பட்டது என்று நம்பும் வரையில், நிலையான அமைதியை ஏற்படுத்துவது கடினம்.

இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவை மீண்டும் நினைவுபடுத்துவதுடன், உதவிகளையும் வழங்கும், கண்காணிப்பையும் மேற்கொள்ளும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …