Friday , April 19 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புலிகளின் காலத்தில் மதுபானசாலைகள் இருக்கவில்லை

புலிகளின் காலத்தில் மதுபானசாலைகள் இருக்கவில்லை

புலிகளின் காலத்தில் மதுபானசாலைகள் இருக்கவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் தமிழர் தாயகப் பகுதிகளில் எந்தவொரு மதுபானசாலைகள் இருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் 47 மதுபானசாலைகள் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது 50 மதுபானசாலைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் இடம்பெறும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை – கும்பிடுமலை பகுதியில் மதுபான தொழிற்சாலை கட்டப்படுவதாகவும் இது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் மருமகன் அலோசியஸிற்கு சொந்தமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் மட்டுமல்லாமல் தற்பொழுதும் ஊழல்களில் ஈடுபடும் அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும் சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …